Pages

Thursday, September 5, 2013

104 - முத்து காமிக்ஸ்: ஆதலினால் அதகளம் செய்வீர் + சன் ஷைன் லைப்ரரி: கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்


புத்தகம் கையில் வந்ததும் தோன்றிய முதல் எண்ணம் "ஏன் இந்த திடீர் எடை குறைவு", உள்ளே திருப்பிய பின் இருபுத்கங்களிலும் சித்திரங்களின் பிரிண்டிங் எப்போதும் போல் இல்லாமால் ஆங்காங்கே மங்கலாக இருப்பது வருத்தமளித்தது. (மீண்டும் ஒரு ரத்தத்டம்?). ஏன் சார் இப்படி???

முதலில் படித்தது "சாலையில் ஒரு சலனம்" :
==========================================

எனக்கு பிடித்திருந்தது. கதையின் ஆரம்பத்திலும், முடிவிலும் கறுப்புக் கிழவியை விட்டு விட்டார்களோ என்று தோன்றியது. கருப்புக்கிழவி கதை படித்த நினைவு. மொழி பெயர்ப்பு பலகாலத்திற்கு முன்பே செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது. பழைய லயன் முத்து காமிக்ஸ் படித்த உணர்வு தோன்றியது. (சமீபத்தில் காணப்படுவது போல் கொக்கிகள் "?" மொழிபெயர்ப்பில் ஓரிடத்தில் கூட கண்ணில் படவில்லை :-).)


கதைகளைப் பற்றி ஞாயிறு அன்று (அலுவலகம் விடுமுறை இருந்தால் :(:(. ) விமர்சன பதிவில் எழுதுகிறேன் நண்பர்களே.



























4 comments: