Pages

Saturday, October 15, 2016

133 - LUCKY LUKE - OUTLAWS

மிக நீநீநீண்ட இடைவெளிக்குப் பின் எழுதப்படும் பதிவு இது. இந்தப்பதிவில் OUTLAWS என்ற லக்கி லூக் கதையில் என்னை ஈர்த்த சில விஷயங்களை மட்டும் பகிர்கிறேன்.


இது இரண்டு கதைகளைக் கொண்ட வெளியீடு: 

1. Outlaws



2. Return of Daltons



முதல் கதை பற்றிய சுவாரஸ்ய விஷயங்களைப் பற்றி மட்டும் பகிர்கிறேன்.

இதில் டால்டன்கள் பெயர் வழக்கமான "ஜோ, ஆவ்ரெல்" என்றெல்லாம் கிடையாது. உண்மையான வரலாற்றுப் பெயர்கள்.



டால்டன் சகோதரர்கள் ஐவர். அவர்களில் மிகவும் மூத்தவரான FRANK அமெரிக்க மார்ஷலாக பணிபுரிகையில் கொலையுண்டவர். மீதம் நால்வரே நம்மவர்கள். டால்டன் சகோதரர்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள: Dalton Gang.



இக்கதை Coffeeville Bank Robbery எனப்படும், வரலாற்றில் டால்டன்கள் பலியாக நேரிட்ட உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

Real life பாப் டால்டனுக்கு (ஜோ டால்டன்) ஒரு லட்சியம் உண்டாம். ஓரே நாளின் பகல்பொழுதில் இரு வங்கிக் கொள்ளைகளை நிகழ்த்திய Jesse James-ன் Record-ஐ உடைக்க வேண்டும் என்பதே அது.

அதன்படி coffeeville-ன் CM Condon & Company Bank, First National Bank இரண்டையும் கொள்ளையடிக்க முற்பட்டு தோல்வியில் முடிய அதில் Emmet Dalton தவிர அனைவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Emmet Dalton 23 குண்டுடடிகளுக்குப் பின்னும் உயிர் தப்பி (என் பெயர் டைகர் படித்துவிட்டு டைகரைக் கிண்டல் செய்த மக்கள் நல்லா note பண்ணிக்குங்க :-) ) ஆயுள் தண்டனைக்கு ஆளானான். 14 வருட தண்டனைக்கு காலத்துக்குப் பின் வெளியே வந்து REAL ESTATE ஏஜெண்ட், நடிகர் மற்றும் எழுத்தாளராக பின்பகுதி வாழ்க்கையைக் கழித்தான்.

டால்டன்கள் இக்கதையில் அடிக்கும் கூத்துகள் ஏராளம். செவ்விந்தியர்கள் போல் மாறுவேடம் புனைவது, பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக முகத்தை மாற்றிக் கொள்வது என்று சிறுகதையில் நிறைய சேஷ்டைகள் புரிந்துள்ளனர்.



 லக்கி லூக் மற்றும்  பாப் (@) ஜோ டால்டன் இடையிலான பலப்பரீட்சை சுவாரஸ்யமானது.




3 comments:

  1. மீள் வருகைக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் வரவிருக்கும் பதிவுகளுக்கு முன்னோட்டமாக இதனை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.. அருமையான பதிவு அப்படியே ஆசிரியரிடம் உங்களுக்கு இருக்கும் இணக்கத்தை வைத்து இந்தவருடம் தமிழில் வர வைத்ததால் நாங்களும் மகிழ்வோம்.

    ReplyDelete
  2. Nice article, good information and write about more articles about it.
    Keep it up
    success tips in tamil

    ReplyDelete
  3. Bro nenga romba nalla post podurenga .

    ReplyDelete