Pages

Saturday, April 18, 2015

131 - MINNUM MARANAM | மின்னும் மரணம் ( ஒரு ஒற்றைக்கைப் பதிவு )


மின்னும் மரணம்




இத்தொடரை வர்ணிக்கவோ, விவரிக்கவோ புவிப்பரப்பில் தோற்றம் கண்ட எம்மொழியிலும் ஈடான எழுத்துக்களோ, வார்த்தைகளோ ஜனிக்கவில்லை என்றே கூறுவேன். தந்திரங்களின் கையால்தகளிலும், துல்லியமான திட்டமிடல்களிலும், யதார்த்தமான  கதையோட்டத்திலும் இத்தொடரே உச்சம்.



JEAN MICHAEL CHARLIER-ன்  கேப்டன் டைகர் தொடரின் அனைத்து கதைகளுக்குமே மேலே உள்ள பத்தி பொருந்தும் என்றாலும், இத்தொடர்கள் யாவும் மகுடமெனின் அம்மகுடத்தில் சூடப்பட்ட கோஹினூர் "மின்னும் மரணம் தொடர்" என்றால் மிகையல்ல.



JEAN MOBIEUS GIRAUD-ன் உயிரோட்டமான சித்திரங்களும் இத்தொடரின் வெற்றிக்கு தவிர்க்க முடியா பங்காற்றியிருந்தாலும், கேப்டன் டைகர் தொடர்களில் கதாசிரியரின் பங்கே உயிர்நாடி என்பது என் கருத்து.



JEAN MICHAEL CHARLIER - உயிர் என்றால், JEAN MOBIEUS GIRAUD - உடல்.



இத்தொடர் MOJO PRESS மூலமாக பதிப்பிக்கப்பட்ட மின்னும் மரணம் தொடர் 1997-ல் Eisner Awards-ன்  Best Archival Collection-க்கு பரிந்துரைக்கப்பட்டது.


INTRODUCTION

BLUEBERRY:




JEAN MICHAEL CHARLIER:






JEAN MOBIEUS GIRAUD:







டைகர் மற்றும் மின்னும் மரணம் பற்றிய திரு. விஜயன் சார் கருத்துக்கள்:












மின்னும் மரணம் பற்றிய பிரபலங்களின் கருத்துக்கள்:





மின்னும் மரணம் கதை வரிசை:







டைகர் கதை வரிசைகள்:






பிரதான கதாபாத்திரங்கள்:




கேப்டன் டைகர்:

WESTERN SERIES-ன் அகராதி. ஹீரோவில் ஒரு போக்கிரி. யாருக்கும், எந்த விதிகளுக்கும் கட்டுப்படாதவர். நியாயத்தின் பக்கமே இருக்க எண்ணும் சாமான்யன். யதார்த்த ஹீரோ. தான்தோன்றித்தனமாக காரியமாற்றும் அழுக்கு சிப்பாய். செவ்விந்தியர்களின் நண்பன். திட்டமிடலில் சாணக்யனுக்கே குரு. மரண வாயிலை பலமுறை தரிசித்து திரும்பியவர்.

லயன் காமிக்ஸோ (டைகர் முத்து காமிக்ஸ் ஹீரோவாக இருந்தாலும்), முத்து காமிக்ஸோ எதுவாக இருந்தாலும் ஸ்பெஷல் தருணங்களில் டைகருக்கு பிரதான இடம் உண்டு. டெக்ஸ் இல்லாமல் முத்து காமிக்ஸ் ஸ்பெஷல் உண்டு. ஆனால் டைகர் இல்லாமல் லயன் மெகா ஸ்பெஷல்கள் இல்லை.

சிகுவாகுவா சில்க் (பியர்ல்):



இப்படி ஒரு வில்லியை (ஹீரோயின் கூட இவரே!!!) காமிக்ஸ் உலகில் இதுவரை கண்டதில்லை. அப்படி ஒரு வில்லத்தனம், அதிலும் ஒரு யதார்த்தம், எல்லாவற்றிற்கும் மேலாக சுயநலம். பல காட்சிகளில் டைகருக்கே தண்ணி காட்டிடும் இவர் கதாபாத்திரம் கதாநாயகனை சில காட்சிகளில் ஓவர் டேக் செய்வதென்னவோ நிஜமே.

ஜிம்மி:

டைகரின் வயதான தோழர். பல நேரங்களில் தன உயிரையும் துச்சமென மதித்து காப்பாற்றியவர். பல கதைகளில்/காட்சிகளில் டைகருக்கு திட்டமிடலில் விவேகமான அறிவுரைகளை தன் முதிர்ந்த அனுபவத்தின் மூலமாக வழங்கும் அனுபவசாலி மொடாக் குடியர்.


ரெட் உல்லி:

டைகர் அணியின் மற்றுமொரு செயல்வீரர். டைகரின் கதைகளில் டைகரின் திட்டங்களை செயல்படுத்தும் ONE OF THE UNSUNG HERO.

கமாண்டர் விகோ:

"தங்கக் கல்லறை லக்னருக்குப்" பின் மனதில் பதிந்து விட்ட வில்லன். மின்னும் மரணம் மெகா ஸ்பெஷல்-ன் இறுதி பக்கத்தில் இவர் டைகருக்கு எதிராக கூறும் "அந்தர் பல்டி" சாட்சி ஒன்று போதும் இவரின் நரிக்குணத்தை வெளிப்படுத்த.




பின்லே:

தெற்கத்திய புரட்சிப்படை கேப்டன் + தங்கத்தின் மீதான ஆசை கொண்டு தங்கத்திற்கான பந்தயத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டவன். கூட்டாளியையே முதுகில் சுட்டுத் தள்ளும் நேசகுணம் இவர் ஸ்பெஷல். 

கவர்னர் லோபெஸ்:

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல் இவருக்கு தங்கத்தின் மீதும் ஆசை, சில்க்கின் மீதும் ஆசை :-). சில்க்கிடம் படாதபாடு பட்டாலும், சில்க் மீதான பிரேமை குறையா கதாபாத்திரம். இவரின் "சைனாக்கார  சமையல் + சித்திரவதை ஸ்பெஷலிஸ்ட்" லோபெசின் கொடூர குணத்திற்கு சான்று.

ட்ரெவர்:

சில்க்கின் கணவர்?!!. [கணவர் - இதை எழுதும் பொழுது வடிவேலு நகைச்சுவையில் ஒரு காட்சிதான் நினைவுக்கு வருகிறது. வடிவேலு ஏட்டாக இருக்கும் காவல் நிலையத்திற்கு 4 பேருடன் வரும் பெண் ஒருத்தி, இவர் என் காதலர், இவர்தான் முறைப்படி தாலி கட்டின முதல் கணவர், இவர்தான் என் குழந்தைக்கு சொந்தக்காரர் என்று அடுக்கும் காட்சிதான் அது :-) :-) :-) ] புதையல் இரகசியம் அறிந்த, அதை அனுபவிக்க இயலாமல் உயிர்துறக்கும் பரிதாப ஜீவன்.

மேஜிக் நிபுணன் பௌடினி:

சில்க் உடன் இருந்து கொண்டே நைச்சியமாக செயல்புரியும் லோபெசின் ஒற்றன்.

டோனகன்:

வெகுமதி வேட்டையன். டைகருக்கு குடைச்சல் கொடுக்கும் மற்றுமொருவன்.

கெல்லி:

சிறையில் ஒரு புயலில் இணையும் மற்றுமொரு கொடூரன். டைகரை இவன் படுத்தும் பாடும், பின் டைகர் இவனை அதே பாணியில் பழிவாங்குதலும் "நச்" காட்சிகள்.

ஏஞ்ஜெல் ஃபேஸ்:



குழந்தை முகத்தில் ஒரு வில்லன். சுடுவதில் திறமை பொருந்திய, ப்ரெசிடென்ட் கிராண்ட்டை போட்டுத்தள்ள வரும் ஸ்பெஷலிஸ்ட். இறுதியில் அழகு முகம் கருகிப் போவது அதிர்ச்சி. 

காற்றில் கரைந்த கூட்டம் (​மெகா ட்ரீம் ஸ்பெஷல் - மூன்று பாகங்கள்):

இம்மூன்று பாகங்கள் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். இம்மூன்று பாகங்களுக்கு ஈடாக தமிழ் காமிக்ஸில் இதுவரைக்கும் ஒரு கதை வெளிவந்ததில்லை. இனி வெளிவரப் போவதுமில்லை என்று மார்தட்டி உரைக்கலாம்.

டைகர் தொடரின் உச்சம் இம்மூன்று பாகங்கள். டைகரின் திட்டமிடலுக்கும், அறிவுத்திறனுக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இவை.


டைகர் என்றா கூறினேன். இல்லை, இல்லை "TSI NA PAH @ ஷி-நா-பா". ஆம் இப்பாகங்கள் முழுதும் உடைந்த மூக்கார் என்ற செவ்விந்திய அடைமொழியுடன் அதகளம் புரிந்திருப்பார் கேப்டன் டைகர்.

டால்சன், பில் ஹிக்காக்:

மின்னும் மரணம் தொடரின் முதுகெலும்பான காற்றில் கரைந்த கூட்டம் பகுதியில் வரும் மற்றும் இரு வில்லன்கள்.

எக்ஸ்கல் ஜெட், ஹாக், மாஹாக்:

செவ்விந்தியர்களால் மண்டைத்தொலி உரிக்கப்பட்ட கொடூர வில்லன். ஹாக், மாஹாக் - செவ்விந்தியர்களின் இருப்பை மோப்ப சக்தி மூலமாக தொலைவிலிருந்தே கண்டறிந்து ஜெட்டுக்கு உதவும் கொடூர நாய்கள்.

கொசைஸ்:

வீரம் மற்றும் விவேகம் நிறை தலைவர். இப்பாகத்தில் அவரின் மரணம் நெஞ்சை உலுக்கும் காட்சி. இக்காட்சிக்கு சற்றுமுன்பாக ஒரு காட்சியில் செவ்விந்திய வயோதிகர்கள் தங்கள் இனத்தவற்காக செய்யும் தியாகமும் குறிப்பிடத் தக்கது.


விக்டோரியா:



செவ்விந்திய வில்லன். மூர்க்கமான வில்லனாக இருந்து பின்னர் திருந்தி நல்லவன் ஆகிறான்.

க்ஷினி:


செவ்விந்திய பெண். டைகரின் இப்பாக "LADY LOVE".

ஜெனரல் அலிஸ்டர்:

இக்கதையில் வரும் அனைத்து சதிகளுக்கும் மூலகாரணம் இவரே. இவரே அனைவரையும் ஆட்டுவிப்பவர். இறுதிப்பாகத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார்.



இன்னும் ஒருவரைப் பற்றி கூறாவிட்டால் கேப்டன் டைகர் மன்னிக்க மாட்டார்:

அவர்தான் "குபி பால்மர்":

தங்கக் கல்லறையில் பாலைவனத்தில் தாகத்தால் கழுகுகளுக்கு இரையாக வேண்டிய டைகரை, பாலைவனத்தில் உதித்த தேவதையாக வந்து தண்ணீர் கொடுத்து காப்பாற்றும் இந்த குண்டு தேவதை, ப்ரெசிடெண்ட் கிராண்டின் காதலி.

"திசை திரும்பிய தோட்டா"-வில் டைகருக்காக உயிர்த்தியாகம் செய்தவர்.


பி.கு.: நண்பர்களே என் நினைவில் நின்ற அத்தனை கதாபாத்திரங்களையும் பட்டியலிட்டுள்ளேன். புத்தகத்தை திருப்பும் அளவிற்கு நேரமில்லை மன்னிக்கவும்.




முன்பு வெளியான டைகர் போஸ்டர்ஸ் + இலவச இணைப்புகள்:












FAN MADE மின்னும் மரணம்:






















நிறைய எழுத நினைத்தாலும் ஒற்றைக் கையுடன் எழுத முடியவில்லை. இப்போதைக்கு இவ்வளவுதான். நாளை சந்திக்கிறேன் FRIENDS :-)

17 comments:

  1. அட்டகாசம்..! உங்கள் தளபதியின் காதல் மெய்சிலிர்க்க வைக்கிறது நண்பரே..!

    ReplyDelete
  2. நண்பரே புத்தக திருவிழாவிற்கு நீங்கள் வரவில்லயா ? Get well soon ...

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு !

    ReplyDelete
  4. இந்த பதிவை படித்தவுடன் எனக்கு தோன்றியது ஒன்று தான். இவரை விட பெரிய டைகர் ரசிகர் யாரும் இருக்க முடியாது.

    ReplyDelete
  5. சித்திர கதைகள் என்பது சாதாரணம் அல்ல என்பது இன்னும் நிறைய பேருக்கு தெரியவில்லை.
    காமிக்ஸ் கதைகள் கூட ஒரு வகையில் இலக்கியமே, சில வேளைகளில் நாம் இலக்கியம் என்று சிலாகிப்பதைவிட காமிக்ஸ்கள் தரமுள்ளவையாக இருப்பதுண்டு. அவற்றில் புளுபெர்ரி கதைகளும் சேரும்.உங்கள் நுண்ணிய ரசனை அபாரம்.வெயிலும் வெயில் சார்ந்த சூழலும் இக்கதையைப் படித்து இன்புற உவப்பான ஒன்று என்பதில் ஐயமில்லை. முற்றிலும் வித்தியாசம்..நிறைய ரசிக்கும் படியான விஷயங்கள்...பதிவு முழுவதும்
    ஒவ்வொரு வரியையும் ஆர்வத்துடன் படித்தேன்.உங்களின் உடல் நலம்பெற என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. he ஹி ஹி விசிறிகள் தயாரித்து விட்ட காமிக்ஸ் குறித்து எப்படி குறிப்பிடுவது என்கிற குழப்பத்தில் இருந்தேன். அட்டகாசமாக வெளிப்படுத்தி இருக்கீங்க தோழர்! ஹீ ஹீ ஹீ இது அதுக்கும் மேல அமையணும், அதான் நம்ம ஆசை[

    ReplyDelete
  7. Super Soundhar sorry Tsi na pah you deseved to be called like that. I like the collated evidences of editor's fandom of Blueberry. Superb post. Meet you guys tomorrow.

    ReplyDelete
  8. இரத்தக் கோட்டை இதுபோல ஒரு கலக்ஷனாக கலரில் வந்தால் அருமையாக இருக்கும்

    ReplyDelete
  9. Great work friend.... I am also a great fan our THALAPATHY like u (Not Ilaya thalapathy- I speak about BLUEBERRY).. The level of expectation Increase to some extent after reading your review about d upcoming MINNUM MARANAM...U reveals ur love towards Blueberry in each & every line... Thanx 4 ur excellent review...I AM WAITING...

    ReplyDelete
  10. Wow attakasam ponga.. Otha kaiya vachu ippadi oru pathiva.. Yengalukku seriyana yethiri than neenga

    ReplyDelete
  11. Fan made kidaicha nallarukkum

    ReplyDelete
  12. இதில் பதிவிட்டுள்ள கடைசி புத்தகங்கள் கிடைக்குமா சகோ?

    ReplyDelete
  13. சிறப்பான பதிவு

    ReplyDelete
  14. அருமை சௌந்தர் ஜி.. hard work.. very nice..

    ReplyDelete