Pages

Thursday, January 15, 2015

128 - கேப்டன் டைகர் : மின்னும் மரணம் (பாகம் 1) - முன்னோட்டம்

விரைவிலேயே வெளிவர இருக்கும் "கேப்டன் டைகரின் மின்னும் மரணம் THE COMPLETE SAGA" பற்றிய சுருக்கமான முன்னோட்ட பதிவுத் தொடர்: 








மின்னும் மரணம் பாகம் 1: சிகுவாகுவா பெர்ல் (சில்க்)



அமெரிக்க எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் கேப்டன் டைகர் வசம் அமெரிக்க ஜனாதிபதிக்கு செல்ல வேண்டிய ரகசியக் கடிதமொன்று கிடைக்கப் பெற, அதனை மேலதிகாரியிடம் ஒப்படைக்கிறார். இக்கடிதத்தைக் கைப்பற்றத் துடிக்கும் மெக்ஸிகன் கமாண்டர் விகோவின் முயற்சிக்கு முட்டுக்கட்டையிட்டதன் மூலமாக அவரின் தீராப்பகையை சம்பாதிக்கிறார் டைகர்.



அதன் பின் அக்கடிதம் டைகரை அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது "ஜெப் டேவிஸ்" என்ற தெற்கத்திய படைத்தலைவர் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான லெப்டினன்ட் ஒருவரிடம் கொடுத்துப் பதுக்கிய அரைமில்லியன் பெறுமானமுள்ள தங்கத்தை மீட்கும் பணியில் நுழைக்கிறது.



அமெரிக்க ஜனாதிபதியின் "சீஃப் மிலிட்டரி அட்வைசர்"  ஜெனரெல் மேக்பெர்ஸன் வாயிலாக இவ்விவகாரத்தைப் பற்றிய முழுவிவரமும் அறிகிறார் டைகர். அந்த லெப்டினன்ட்டின் தூதுப் புறாவான "எல் சுசில்லோ" என்னும் புனைப்பெயர் (அதாங்க FAKE ID :-) ) கொண்ட நபரின் உதவியுடன் தங்கத்தையும், மெக்ஸிகன் சிறையில் அடைபட்டிருக்கும் அந்த லெப்டினன்டையும் மீட்க டைகர் கிளம்புகிறார். துணைக்கு ஜிம்மி மற்றும் ரெட் உல்லியுடன்.

இதுவே முதல் பாகத்தின் சுருக்கம்.



முதல் பாகத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்கள்:





டைகர் கதைகளின் முதுகெலும்பே அதில் வரும் யதார்த்தமான திட்டமிடல்களும், தந்திரங்களுமே. அதிலும் மற்ற தொடர்களைப் போல் கதாநாயகன் மட்டுமே திட்டமிடுதலில் வல்லவராகவும், மற்ற அனைவரும் சோதாக்களாகவும் இருப்பதில்லை. ஒரு சில காட்சிகளுடன் ஏறக்கட்டப்படும் பாத்திரங்கள் கூட நரித்தனமாகவும், நாசூக்காகவும் செயல்படக் கூடியவை. அதனால் பல நாட்கள் கடந்த பின்னும் டைகர் கதைகளில் வரும் பல கதாபாத்திரங்களின் பெயர் நம் நினைவில் அழியாது நிற்கும்.

கதாநாயகன் அல்லாத மற்றவர்களின் சிறப்பான திட்டமிடல்களுக்கு ஒரு சிறந்த உதாரணம் பின்லே-வின் கீழே வரும் காட்சி:




ஒரு சில காட்சிகளே தோன்றும் ஷெரீப்பின் நரிக்குணம்:




விகோ-வின் திட்டமிடல்:



டைகரின் அதிரடிக் காட்சிகள்:















இரண்டாம் பாகம்: The Half-a-Million Dollar Man விரைவில் ...

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 

7 comments:

  1. ரீ பிரின்டுக்கு பதிவு நல்லா வருவீர்கள் -:)

    ReplyDelete
    Replies
    1. இங்கே கருத்திடவென்றே ஆரம்பிக்கப் பட்ட ஐடியா??!

      ரீபிரிண்ட்டாக இருந்தாலும் டைகர் கதைக்கு பதிவெழுதுவது வொர்த்தான விஷயமே :-

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி குயின் :-)

      Delete
  2. @ TSI-NA-PAH

    அட்டகாசம் ! அருமையான முயற்சி !! நிச்சயம் உதவும் தகவல்கள் !!! அந்த பிரேம் சூப்பரோ சூப்பர்...! தொடருங்கள் நண்பரே...!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ப்ரோ.

      வாரம் ஒரு பாகமாக தொடரும் நன்றி :-)

      Delete
  3. வாழ்நாள் சேகரிப்பு சாதனை புத்தகமாவது இந்த இதழாவது LMS தரத்தில் அமைய வேண்டும் .இதிலும் அலட்சியம் தொடர்ந்தால் நானும் நண்பர் சுப்பிரமணியன் அவர்களும் லயன் /முத்து உடனான நமது நீண்ட பயணத்தை முடித்துக்கொள்வதாக உள்ளோம் .

    ReplyDelete
    Replies
    1. நல்லதே நடக்கும் என்று நம்புவோம் ப்ரோ :-)

      LMS making-ல் நம்மை திருப்தி படுத்தியது போல் இதிலும் விஜயன் சார் நம்மை சந்தோஷப் படுத்துவார் :-)

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ப்ரோ :-)

      Delete