Pages

Sunday, January 4, 2015

127 - லயன் காமிக்ஸ் & முத்து காமிக்ஸ் - புத்தாண்டு 2015

2015 இவ்வருடம் துவக்கமே அதிரடியாக 5 காமிக்ஸ்களை வெளியிட்டு நம் லயன் முத்து காமிக்ஸ் அதிரடியாக துவக்கம் கண்டுள்ளது. அவ்வண்ணமே தொடர  வேண்டும். ஆயினும் ஒரே மாதத்தில் 10 காமிக்ஸ்கள் வாங்கும் அளவிற்கு ...... கொஞ்சம் சிரமம்தான். மாதம் மூன்று புத்தகங்கள் என்பதும், மாத பட்ஜெட் 300 வரை என்னும் விதத்திலும் தொடர்ந்தாள் ஓரளவு தாக்கு பிடிக்கலாம்.

நள்ளிவு நங்கை:


பலர் கதையை இதுவரை படித்திருப்பீர்களா என்று தெரியாததாலும், சிலருக்கு புத்தகம் இன்னமும் கிடைக்காத காரணத்தாலும் கதையைப் பற்றி விரிவாகவோ, சுருக்கமாகவோ கூறப்போவதில்லை.

என் அபிப்ராயம் மட்டுமே:

முதலில் தமிழில் வெளிவந்த கதை மிகவும் பிடித்திருந்தது.

இரண்டாவதாக வந்த கதை கிளைமாக்ஸ் சொதப்பலால் பிடிக்கவில்லை.

இப்போது வந்துள்ள "நள்ளிரவு நங்கை" பிடித்துள்ளது என்றும் சொல்ல இயலவில்லை, பிடிக்கவில்லை என்றும் சொல்ல இயலா திரிசங்கு சொர்க்கமாகி விட்டது என் நிலை.

கதை நன்றாகவே சென்றது ...


பின்றானே டைலான் டாக் என்று நினைக்கையில்

.
.
.
இறுதி சில பக்கங்களில் வரும் விளக்கங்களில் "உங்களுக்கு ஓகேன்னா இப்படியும் வைத்துக் கொள்ளலாம்" என்ற ரீதியில் முடித்திருப்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
இறுதியாக விஜயன் சார் ஹாட்லைன் வாயிலாக காட்சியளித்து "பதறாதே தம்பி டைலானிடம் இன்னும் நிறைய பார்க்க வேண்டி உள்ளது தேறிடுவார்." என்று கூறி தெளிவித்தார்.
ஆனால் ஒன்று உண்மை "கதையின் இறுதி சில பக்கங்களை நான் வாசித்த வேளைகளில் என் வீட்டில் பலமுறை கூப்பிட்டும் நான் காதில் வாங்கவில்லை என்பதை புத்தகத்தை மூடி கீழே வைக்கையில் கண்ட முறைப்பில் அறிந்து கொண்டேன்"
கதையின் இறுதிப் பக்கங்கள் என்னை முழுதாக விழுங்கிக் கொண்டன என்பது உண்மை. நீண்ட நாள் கழித்து என்னை மறந்து காமிக்ஸில் ஐக்கியமாகி விட்டேன். 
பிரிண்டிங்: 3D காட்சிகள் ஆங்காங்கே சில பக்கங்களில். முன் அட்டைப் படமே BLUR ஆகிறது.

நிழலோடு நிஜ யுத்தம்:



மாடஸ்டி..., என்னத்த சொல்ல  இப்படியொரு மோசமான சித்திர தரம் கொண்ட கதையை மாடஸ்டியின் கம்பேக்கிற்கு தேர்வு செய்தது ஏனோ??! புதுவருடத்தின் திருஷ்டிக் கழிப்பாகி விட்டது.

அட்டைப்படம் நன்றாக இருந்தது. கதையைப் பொருத்தவரை வரை கோர்வையாக சென்றது. மிகவும் பிடித்திருந்தது. எல்லாம் நன்றாக இருந்தும், கதைகளின் சித்திரம் மோசமாக அமைந்தது கொடுமை. சித்திரம் வரைந்த "Neville Calvin"-ஐ நினைத்து பல காட்சிகளில் நொந்து கொண்டேன்.

உதாரணத்திற்கு மாடஸ்டியும், மாடஸ்டியின் நகல் ஜெமினியும் மோதிக் கொள்ளும் காட்சியில் சித்திரங்களின் கொடுமையைப் பாருங்கள்:



இந்தக் காட்சியை வேறு ஓவியரிடம் வழங்கியிருந்தால் கீழே உள்ளது போல் தெளிவாக அதிரடியாக வந்திருக்குமே என்ற ஏக்கம் எழாமலில்லை :-)



பிரிண்டிங் தரம்:

என்னைப் பொருத்தவரை மாடஸ்டி கதையில் பிரிண்டிங்-கில் எந்தக் குறைபாடும் இருப்பதாக தெரியவில்லை. ஒரிஜினல் சித்திரங்களிலேயே இப்படித்தான் உள்ளது. கீழே "THE DOUBLE AGENT (1986)"ஆங்கில பிரதியின் பக்கங்களில் சில இணைத்துள்ளேன் பார்த்துக் கொள்ளவும்:








ஓவியர் Neville Calvin-ன் மற்றுமொரு கதையின் ஒரு பக்கம்:



லக்கி லூக் & ப்ளூ கோட் பிரிண்டிங் பக்கா அமர்க்களம். ஆனால் வண்ணத்தின் பாயிண்ட்டுகளை யாரோ ரிமோட் கண்ட்ரோல் கொண்டு அதிகப் படுத்திவிட்ட பீலிங். கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

டயபாலிக் பிரிண்டிங் மேக்கிங் 200% ஓகே.

அனைவருக்கும் தாமதமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


4 comments:

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ. இன்னும் சில ஸ்கான்களை இணைத்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ப்ரோ

      //ஸ்கேன்கள்// முன் போல் பொறுமையாக ஸ்கேன் செய்திட நேரம் வாய்ப்பது அரிதாகி விட்டது ப்ரோ

      Delete
  2. Dylan dog review was super. I had the same feeling the climax explanation was a dud but until then it was great.

    ReplyDelete