இந்தக் கதையைப் பற்றி விமர்சிக்கும் முன்,
டெக்ஸ் கதை என்றாலே "கழுகு வேட்டை" போன்று அதிரடியாக அமைந்திருக்கு ம் என்ற எதிர்பார்ப்புடனும், உறசாகத்துடனும் படிப்பது என் வழக்கம். ஆனால் சமீப காலமாக இந்தக் கதையிலாவது டெக்ஸ் தேறணுமே என்ற பயத்துடனே படிக்க வேண்டியுள்ளது :-) (ஆனாலும் 2 COPY வாங்கிவிட்டேன் என்பது வேறுவிசயம்.).
அதே பயத்தில்தான் இந்தக் கதையையும் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் ...
இவ்வளவு பெரிய மரண மொக்கை கதையை (அந்த டைனோசார் கதைக்குப் பின்) டெக்ஸிடம் நான் எதிர்பார்க்கவே இல்லை. அரதப் பழசாகிப் போன, டெக்ஸ் கதையிலேயே பலமுறை வந்துவிட்ட, அரசு தரப்பு செவ்விந்திய அதிகாரியின் மோசடியை அடிப்படையாகக் கொண்ட கதை. அந்த மோசடி பேர்வழிகளை டெக்ஸ் காலி செய்கிறார் (இதையே எத்தனை நாளைக்குதான்யா அரைப்பீங்க ???). ஆனா ஊனா மஞ்சா சட்டையை இஸ்திரி போட்டுக்கிட்டு கிளம்பிடுறாருப்பா. இந்தக் கதையில கூடுதலா தொப்பில ஒரு கருப்பு ரிப்பன் வேற :-).
அதுவும் போக வர வர டெக்ஸ் தனக்கே உரிய அதீத தெனாவெட்டான பாணியில் செயல்படாமல், எதிராளிகளிடம் கெஞ்சிக் கூத்தாடுவது/விளக்கமளிப்பது சகி க்கவில்லை. முன்பெல்லாம் தாடையில் இடியென ஒரு குத்தை விட்டால் எதிராளி சலூன் சன்னலைப் பிய்த்துக் கொண்டு வீதியில் விழுந்த பின், நடுவீதியில் வைத்துதான் குசலம் விசாரிப்பார் டெக்ஸ். இப்போதெல்லாம் அந்த சாந்த சொரூபியைக் காணவில்லையே :-( :-(.
சித்திரங்கள் ஓகே. ஆனால், ஆங்காங்கே பல இடங்களில் இவர் டெக்ஸா? என்று கேள்வி கேட்கும் விதத்தில் சித்திரங்கள் அமைந்துள்ளது. தனி சித்திரமாக அதைப் பார்த்தால் அது டெக்ஸ் என்று நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் அமைந்துள்ளது டெக்ஸ்-ன் தோற்றம்.
டெக்ஸ்-ன் நெருக்கமான காட்சிகளில் டெக்ஸ் மிக அழகாக வரையப் பட்டுள்ளார். ஆனால் சிறிது தள்ளி இருந்து காட்டப் படும் காட்சிகளில் பழைய கதைகளில் வருமளவுக்கு PERFECTION இல்லை.
Nalla Vimarsanam editor kannil pada vendum.Nil kavani Suduvum same story than.டெக்ஸின் அமானுஷ்ய கதைகளை எதிர் பார்கிறேன்!!!
ReplyDeleteசட்டம் அறிந்திரா சமவெளி இவ்வாறு இருக்காது என நம்புவோம்.சட்டம் அறிந்திரா சமவெளி Teaserஇல் டெக்ஸ் வயதானவர் போல் உள்ளார்.அவ்வ்வ்வ்வ்வ்வ்!!!்
ReplyDelete்
Parattai olika..
ReplyDeleteடெக்ஸ் பெயரை வேறு நாயகனுக்குச்சூட்டி அனாமத்துக்கதையை வெளியிட்டுவிட்டார்களோ என்றொரு சந்தேகம் எனக்கு.
ReplyDeleteஆனால் அந்தப் புனித வாம்பம் பட்டை உதைக்கிறதே.!
I just wonder about the XIII advertisement. In my book back side it was not there... not sure why?
ReplyDeleteஒரு டைகர் வெறியர் டெக்ஸ் கதையை விமர்சணம் செய்ய சொன்னால் இப்படித்தான் இருக்கும். :-( LMS வரட்டும் :-)
ReplyDeleteடெக்ஸின் பழைய சாகஸங்கள் (சாந்த சொரூபி) யை உங்களைப்போலவே எனக்கும் பிடிக்கும்.
ReplyDeleteஎன்ன செய்ய அடுத்து வரும் இதழ்கள் நம்மை முழு திருப்தி படுத்தும் என்று நம்புவோமாக.
நான் கேப்டன் டைகரின் டைஹார்ட் ரசிகன்.(பழைய டைகருக்கு மட்டும்).
புது டைகர் கதைகள் முன்பு போல் வீரியமிக்கவையாய் இருக்காது என்பதால் மறு பதிப்புக்குதான் என் முழு ஆதரவு.
Texன் நள்ளிவு வேட்டை,கா.கடந்த காலம், இரத்தநகரம் போன்றவை
Deleteநான் மிகவும் ரசித்த கதைகள்,,
டைகரின் மின்னும் மரணம், தங்க கல்லறை,இரத்த கோட்டை
போன்றவை நான் ரசித்த கதைகள்.
இருவரின் கதைகளும் தற்போது முன்போல் இல்லை என்பதே உண்மை...,
பழைய தரத்தில்.(காகிதம் அல்ல.)மீண்டும் இவர்கள் பட்டையை கிளப்ப வேண்டும் என்பதே என் ஆசை, ,நன்றிகளுடன்..!!!.