Pages

Thursday, April 17, 2014

118 - லயன் காமிக்ஸ் - எதிர் வீட்டில் எதிரிகள்

அட்டைப்படம்:


ஒரிஜினல் அட்டைப்படத்தை விட எனக்கு நமது அட்டைப்படமே மிகவும் பிடித்திருந்தது. அதுவும் படுக்கை வசமாக அமைந்த அட்டைப்படம் மேலும் ஒரு பிளஸ்.





கதை:


ஏற்கனவே CCC (அதாங்க திரு. கிங் விஸ்வா தலைமையிலான கலர் காமிக்ஸ் கும்பல். அவர்களின் சேவையை நினைவு கூறாமல் கடந்து செல்ல இயலவில்லை :-P ) உரிமமின்றி வெளியிட்டிருந்த இந்தக் கதையை படித்திருந்தாலும், நமது லயன் காமிக்ஸ் வெளியீடே சிறப்பாக தெரிந்தது.

சமீபமாக வெளிவந்த லக்கி லூக் கதைகள் (மறுபதிப்புகள் தவிர்த்து) எதுவும்  பழைய லக்கி லூக் கதைகள் போல் மனதில் தங்கவில்லை. ஆனால் இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. நகைச்சுவைக்கும் பஞ்சமேயில்லை.









நான் பார்த்தவரை இரு இடங்களில் வரவேற்பு பலகைகளில் பெயர்கள் தவறாக இடப்பட்டிருந்தது மட்டுமே குறையாக கண்ணில் பட்டது. மற்றபடி என்னை நீண்ட நாட்கள் கழித்து முழுதாக திருப்தி படுத்திய லக்கி லூக் கதை இம்மாதத்தின் "எதிர் வீட்டில் எதிரிகள்".



அச்சுத் தரம்:


போன மாதமும், இந்த மாதமும் வெளிவந்த புத்தகங்களில் அச்சில் குறைகள் எதுவும் என் கண்ணில் படவில்லை. 100% CLEAN & QUALITY PRINTING. தரமான பிரிண்டிங் தொடர வேண்டுகிறேன்.


மொழிபெயர்ப்பு:


நான் பயந்தது போல் மொழிபெயர்ப்பில் எந்தவிதமான நெருடலும் ("தம்பு" என்ற ஒரு வார்த்தை தவிர) தெரியவில்லை. நன்றாக இருந்தது. ஆசிரியரின் மேற்பார்வையில் லக்கியின் வழக்மான ஸ்டைலில் எந்த மாற்றமும் செய்யப்படாதது மகிழ்ச்சி.


நம் அன்பிற்குரிய ஆசிரியருக்கு ஒரு விண்ணப்பம்:


லக்கி லூக் கதைகள் சரித்திர நாயகர்கள்/சம்பவங்களின் பின்னணியை சார்ந்தே நகைச்சுவையாக இழைக்கப் பட்டிருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆங்கில பதிப்புகளில் இறுதிப் பக்கங்களில் இடம் பெறுவது போல் அந்த சரித்திர சம்பவங்கள் மற்றும் மனிதர்களைப் பற்றிய குறு அறிமுகத்தை நாமும் வெளியிடலாமே. என் நீண்ட நாள் ஆசை இது.

"தாயில்லாமல் டால்டனில்லை" கதையில் டால்டன் சகோதர்களின் தாயார் பற்றிய விவரங்கள் இணைக்கப் பட்டிருக்கும். ஏனோ அதை பின்னர் விஜயன் சார் தொடரவில்லை. அதை இனி வரும் கதைகளில் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.




13 comments:

  1. Tsi na pah எதோ விமர்சனம் போடரேன்னு சொல்லிட்டு இருந்தீங்க எங்க//
    அச்சுத்தரம் சில மாதங்களாக நன்றாக இருக்கிறது தொடந்தால் மிக்க மகிழ்ச்சி அட்டை நன்றாக இருந்தது ஆனால் லக்கி மட்டுமே திருஷ்டி பொட்டு மொழி பெயர்பு ok கதையிலும் ஒரு மாற்றம் இருந்தது எதிர் வீட்டில் எதிரிகள் எண்ணிக்கை அதிகம் நகைச்சுவை குறைவு

    ReplyDelete
    Replies
    1. //நகைச்சுவை குறைவு// எனக்கு அப்படி தெரியலையே பாஸ் :-)

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)

      Delete
    2. காது காமெடி மட்டும் என்னை நகைக்க வைத்தது

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)

      Delete
  3. சமீபமா வந்த எந்த லக்கி கதைகளும் பிடிக்கவில்லையா? வில்லனுக்கோர் வேலியிலேயும் இதே கருத்தையே வலியுறுத்தினீர்கள். ஏன்? அச்சுத்தரம் நன்றே! தம்பு- என்ற பதத்தை ஸ்டைல் மற்றும் பழகுமொழியில் பேசுவதாகக் காட்ட செயல்படுத்தியிருக்கலாம். அது எழுத்துப்பிழை இல்லை சார்! 2 மூன்று இடங்களில் தம்பு என போட்டிருப்பார்களே!

    ReplyDelete
  4. எடிட்டருக்கான கோரிக்கை வாழ்த்தி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று சார்!

    ReplyDelete
  5. Ethaiyellam pathiva eathukave mudiyathu . . Konjam pinnokki poai unga pathivailam padinga ungaluke puriyum

    ReplyDelete
  6. Ethaiyellam pathiva eathukave mudiyathu . . Konjam pinnokki poai unga pathivailam padinga ungaluke puriyum

    ReplyDelete
  7. //
    லக்கி லூக் கதைகள் சரித்திர நாயகர்கள்/சம்பவங்களின் பின்னணியை சார்ந்தே நகைச்சுவையாக இழைக்கப் பட்டிருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆங்கில பதிப்புகளில் இறுதிப் பக்கங்களில் இடம் பெறுவது போல் அந்த சரித்திர சம்பவங்கள் மற்றும் மனிதர்களைப் பற்றிய குறு அறிமுகத்தை நாமும் வெளியிடலாமே. என் நீண்ட நாள் ஆசை இது.// நானும் இதையே எதிர்பார்கிறேன். பெரும்பாலும் புன்னகைக்க வைக்கின்ற லக்கிலூக் கதைகள். நாம் சிரிக்கும் அளவிற்கு ரொம்பவுமே நகைச்சுவையாக ஒரு வரலாற்றுகதையை கூற முடியாது என்பதே இதற்கு காரணமாக இருக்கலாம். இப்போது வெளிவர இருக்கும் தெனாலிராமன் படத்தில் மன்னனுக்கு 36 மனைவிகள் 58 பிள்ளைகள் என்று டிரெயிலரில் காட்டியதற்கே தெலுங்குமொழி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பிறகு அனைத்தும் கற்பனையே என டைட்டில் கார்டு போட படகுழுவினர் சம்மதித்த பிறகே படம் வெளிவர இருக்கிறது!

    ReplyDelete