Pages

Friday, January 24, 2014

115 - THE RED DIARY

The Red Diary - The Re[a]d Diary Flipbook (INTRESTING ONE)


A BOLD EXPERIMENT IN "THE GRAPHIC NOVEL!" KRISTIANSEN's European Album is newly translated to English by TEDDY KRISTIANSEN and STEVEN T. SEAGLE. But in a unique flip-novel format, the book is also 're-mixed' with a completely different script devised by SEAGLE before he collaborated on the translation. Both versions - THE RED DIARY - a tale of art forgery and World War and THE RE[A]D DIARY - a tale of identity theft and lost love - comprise this unique graphic novel from SEAGLE and KRISTIANSEN - the Eisner nominated/winning team behind the acclaimed Vertigo graphic novel it's a bird...



============================================================================



A GLANCE FROM INITIAL PAGES (IT CONTAINS "BLUE, GREEN & RED DIARIES"):
===================================================================

பிரெஞ்சு மண்ணின் வெகு ஆழத்தில் படிவமாகிவிட்ட பிரிட்டிஷ் இராணுவ வீரனின் எச்சம்.

பிலிப் மார்ன்ஹாம் தன் அணியுடன் அதிரடியான பதுங்குகுழி தாக்குதலுக்கு சென்றிருந்த வேளை. ஜெர்மானியர்களின் பதுங்குகுழிகளை அவர்கள் அடையும் முன்னமே எதிரணியினர் அவர்களை இனம் கண்டுகொள்ள, அவர்கள் பின்வாங்கும் நிலைக்கு உந்தப்பட்டனர்.

அவர்களை சுற்றிலும் குண்டு மழை பொழிய ஆரம்பித்தது. அதில் ஒரு குண்டு பிலிப்பின் அருகாமையில் விழுந்து, முந்தைய குண்டொன்று தன் அடையாளமாய் விட்டுச் சென்ற குழியில் தூக்கி வீசியது.

அவரது படையினர் பிலிப் மார்ன்ஹாம் இறந்துவிட்டதாக எண்ணிவிட்டனர். ஆனால் அதிகாலையில், உதவிகோரி குரல் எழுப்புகையில், பிலிப் மார்ன்ஹாம் தனித்து விடப்பட்டிருந்தார் அநாதரவாக...

வலது காலும், கையும் குண்டுவெடிப்பால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருந்ததால் அவருக்கு தவழ்ந்தே செல்வதைத் தவிர வேறு உபாயமில்லை.

உறைந்த சேற்று குட்டையில் கிடப்பதை பிலிப் மார்ன்ஹாம் உணர்கையில், அவரது உதவிக்குரல் கதறலாக உருமாறியிருந்தது.

தாக்குதலில் சிலர் எஞ்சியிருந்தாலும் அங்கே ஆணையிட்டு வழிநடுத்துவார் எவருமிலர். போர்க்களப் பகுதிக்கு திரும்ப யாருக்கும் துணிவில்லை. வழிய சென்று உயிர்விட யாரும் விரும்பவில்லை.

பனி மீண்டும் பொழிய ஆரம்பித்தது. அனைத்தும் சாம்பல் இருளாகவும் கடும் குளிராகவும் மாறின.

இருளும், மௌனமான பனியும் பீதியைக் கொணர்ந்தன.

பிலிப்பின் கதறலுக்கிடையில், மிகச் சிலரேயாயினும், பதுங்கு குழியை நோக்கி மீண்டும் பனிப்பொழிவில் சென்றனர். அவர்கள் அவ்வழியாக எப்பொழுதும் மலர்ந்திருக்கும் மரங்களைக்கொண்ட பிரதேசத்தைக் கடந்தனர், ஆனால் தற்பொழுது அந்நிலம் எரிந்த கட்டைகளாலும், பீரங்கி குண்டு சிதறல்கள் விட்டுச்சென்ற துளைகளாலும் மட்டுமே நிறைந்து இருந்தது.

காலையில், நரகம் மீண்டும் வெடிக்க ஆரம்பித்தது. குண்டு மழை மீண்டும் தூவத் துவங்கிற்று, பிலிப்பின் கதறலும்...

=============================================================================












No comments:

Post a Comment