Pages

Wednesday, January 22, 2014

114 - PIETROLINO 1: THE BOXING CLOWN (SHORT VIEW)

அட்டைப்பட ஈர்ப்பில் தரவிறக்கிய கதை 

மனதைத் தொடும் உருக்கமான கதை. படிக்க ஆரம்பித்தவுடன் கதையின் ஈர்ப்பு காந்தமாய் கடத்திச் சென்றது.

MIMING கலைஞன் ஒருவரின் வாழ்வியல் சோகத்தை கதையின் அடிநாதமாகவும், ஜெர்மன் மற்றும் ப்ரான்ஸ் இடையேயான போர்க்காலத்தை களமாகவும் கொண்டது.

வித்தை புரியும் தன் கைகளை நாஜி அதிகாரி சிதைத்த பின் அவற்றை பார்த்து, பார்த்து கலங்குவதும், பணத்திற்காகவும், சுகபோக வாழ்வுக்காகவும் உபோயோகமற்ற காகிதமாய் உதறித்தள்ளும் காதலியின் துரோகம் வெளிப்படும் பொழுது அந்த கலைஞன் வெளிப்படுத்தும் ஆற்றாமையும் கதை ஓவியரின் திறமைகளை அப்பட்டமாக பிரதிபலிக்கின்றன.



மேலும் தன் வித்தைக்கு வெறும் கரவொலிகளை மட்டுமே பசியாற்றும் நாணயங்களாக பெற்ற பின்னும், ஜெர்மன் மற்றும் ப்ரான்ஸ் இடையேயான போர் பற்றிய விகட வித்தையை முன்னிறுத்தி போரில் தோல்வியுற்ற ப்ரான்ஸ் மக்களின் வெற்றி வேட்கையை தூண்டும் "PIETROLINO" வின் கதாபாத்திரம் மிகவும் அழகான சோகம்.


அவ்வளவு கடினமான தருணங்களிலும் நிழலாய் உடன் தொடரும் "குரங்கு" என்று அந்த நாஜி அதிகாரியால் தாழ்த்தியுரைக்கப்படும் குள்ள நண்பனின் பாத்திரம் மிகவும் பிரதானமானது. 


ஆங்கே "PIETROLINO" வின் கலையால் கவரப்பட்ட பூவாத மொட்டொன்று பின்னாளில், ப்ரான்ஸ் நாஜிக்களுடனான போரில் வென்ற பின் சுதந்திர சிறகு விரிக்கும் "PIETROLINO" வின் வாழ்க்கைத்துணையாய் அமைந்து "PIETROLINO" வின் வாழ்வு வசந்தமடைவதும் அழகான முதல் பகுதி முடிவு.
BOOK 2:


TO SEE SOME SAMPLE PAGES OF THE BOOK 2:  PIETROLINO 2: A CRY OF HOPE

3 comments:

  1. Thanks for sharing.I think the writer is the one done the bouncer the name looks familiar

    ReplyDelete
    Replies
    1. Yes nanbaa. Both the writers are same. This book has an outstanding story line & lively art work.

      Delete
    2. Soundarji,
      Thanks for the review and recommendation, will try to read.
      Wrapper cover reminds me Kamal Haasan's "Apoorva Sagodharargal" song, "Unnai Ninaichen Paattu padichchen" and creates good (sad) feeling.

      Delete