Pages

Monday, July 29, 2013

0100 - EGMONT COMICS - வால்ட் டிஸ்னி's டொனல்ட் டக் - மூடு மந்திரம்

நண்பர்களே இப்போதெல்லாம் நம் ஆசிரியரின் லயன் காமிக்ஸ் வலைப்பக்கத்தை பார்க்க கூட நேரமில்லை. அந்த அளவு வேலை பெண்டு நிமித்துகிறார்கள். எப்படியோ ஒரு வழியாக எனது இந்த 100 வது பதிவை எழுத நேரம் அமைந்து விட்டது. கொஞ்சம் சுயபுராணம் அதிகமாக இருக்கும் கண்டுக்காதீங்க. இந்த நேரத்தில் நான் வலைப்பூ எழுத தூண்டுகோலாக இருந்தவர்களைப் பற்றி கண்டிப்பாக கூறியாக வேண்டும். நான் முதன் முதலில் இந்த வலைப்பூவை ஆரம்பித்தது கிரிக்கெட் உலகின் அழியா கடவுளான "சச்சின் டெண்டுல்கர்"-க்காகவே (இந்த வலைப்பூவின் முதல் பதிவை கவனித்தீர்களானால் புரியும்). பின்னர் இரண்டாவது பதிவாக எனது சிறுவயதில் என்னுடனே வளர்ந்த காமிக்ஸ் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால் நம் லயன் காமிக்ஸ் முகவரியுடன் குறும்பதிவு இடப்பட்டது. அந்த பதிவை எழுதிய நாள் வரை தமிழ் காமிக்ஸ் பற்றி ஏற்கனவே நிறைய வலைப்பூக்கள் இணையத்தில் இருப்பது நான் அறியா விஷயம்.

2ஆம் பதிவை எழுதிய சமயத்தில் தமிழ் காமிக்ஸ்/லயன் காமிக்ஸ்/முத்து காமிக்ஸ் என்று GOOGLE -ல் தேடிய பொழுது ஏற்கனவே நிறைய வலைப்பூக்கள் தமிழ் காமிக்ஸ் பற்றிய தகவல்களுடன் இயங்கி வருவது புரிந்தது.

அதில் நான் தொடர ஆரம்பித்த "முத்து விசிறி, தமிழ் காமிக்ஸ் உலகம், காமிக்காலாஜி, முதலை பட்டாளம், Illuminati8.blogspot.in, KK அண்ணா (கனவுகளின் காதலன்), Arun - The Rising Sun" ஆகியவை கொடுத்த உற்சாகத்தால் தொடர்ந்து எழுத எண்ணிய பொழுதிலும் அப்படியே விட்டுவிட்டேன். (இதில் "தமிழ் காமிக்ஸ் உலகம் - விஸ்வா" அவர்கள் என் வலைப்பூவை அவர் வலைரோஜாவில் அறிமுகம் செய்தது என் நினைவில் இன்றும் உள்ளது.)

பின்னொரு நாள் "சரவணா RSK", திருநெல்வேலி அவர்களை தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ள முடிந்தது. வழமை போல் அண்ணா என்று அழைக்க ஆரம்பித்து பின் சில நாட்களில் நேரில் சந்திக்க முடிந்து, அந்த நட்பு இன்று வரை பல வாக்குவாதங்களுடன் தொடர்கிறது. அவரும் என் தொந்தரவுகளை பொறுமையாக தாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் மூலமாக எனக்கு கிடைத்த அறிமுகங்களில் திரு. கெளதம், R. T. முருகன் ஆகியவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.

சரவணா பற்றி இங்கு கூற காரணம், அவர்தான் பாதியில் (துவங்கிய வேகத்திலேயே என்று கூட சொல்லலாம்.) விடப்பட்ட இந்த வலைப்பூ மீண்டு வர காரணம். தொடர்ந்து வலைப்பூவை எழுத சொல்லி அவர் கொடுத்த உத்வேகம்+இம்சை (சமீப காலமாக நண்பர் தினகரன் @ தினாவும் சரவணாவுடன் இணைந்தது கொண்டார். இரவுக்கழுகு கிருஷ்ணாவும் கூட :-)) ஆகியவையே இன்று நான் 100 வது பதிவை எட்ட காரணம் :-). சமீபத்தில் "INDIA TODAY" வரை கொண்டு சென்ற பெருமை முழுதும் சரவணாவையே சேரும். அவர் இல்லாவிட்டால் நான் வலைப்பூவை தொடர்ந்திருக்கவே மாட்டேன்.

 விஜயன் சார் புகைப்படத்துடன் அதே பக்கத்தில் வெளிவந்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி. இந்த கட்டுரைக்காக திரு. நரசிம்மன் அவர்கள் நம் வலைப்பூவில் உள்ள என் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டதாக என்னிடம் 20 நிமிடங்கள் வரை காமிக்ஸ் பற்றி உரையாடிய பொழுது, யாரோ நம்மை கலாய்க்கிறார்கள் என்றுதான் முதலில் எண்ணினேன். இந்தக் கட்டுரை வெளிவந்த தகவலை சரவணா என்னிடம் கூறிய பொழுதுதான் தெரிந்தது உண்மை என்று.
திரு. நரசிம்மன் அவர்களுக்கு நன்றிகள்.

மேலயுள்ள கட்டுரை வெளிவந்த விஷயத்தை என் மனைவி என் அக்காவிடம் தொலைபேசியில் தெரிவித்த பொழுது மிகவும் மகிழ்ச்சியுடன் கூறிய வார்த்தைகளை இங்கே கூறவிரும்புகிறேன். "எழுதப் படிக்க தெரியாத வயதிலிருந்து காமிக்ஸ் படிக்கும் அவனுக்கு கண்டிப்பாக இது ஒரு Encouragement" என்பவைதான் அந்த வார்த்தைகள். எழுதப் படிக்க தெரியாத வயதில் எப்படி படிக்க முடியும் என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம்.

எங்கள் வீட்டில் காமிக்ஸ் அறிமுகப்படுத்திய பெருமை எங்கள் தந்தைக்கே. எங்கள் தந்தை வாங்கி வரும் காமிக்ஸ் புத்தகங்களை என் அக்கா வாசிக்க ஆரம்பிக்கும் பொழுது அவள் அருகில் அமர்ந்து கொண்டு "மனதிற்குள் படிக்காதே அக்கா! சத்தமா படி" என்று படங்களை பார்த்துக் கொண்டே கதை கேட்கும் வழக்கம் எனக்கு 4 வயதிலேயே ஆரம்பித்து விட்டது. இத்தனை வருடங்கள் கழித்து தொலைபேசியில் என் அக்கா மகிழ்ச்சியுடன் என் மனைவியிடம் அதை நினைவுகூர்ந்த அந்த நேரத்தை என்னால் மறக்கவே முடியாது.

சரி பதிவிற்குள் செல்லலாம்.

100th போஸ்ட் ஸ்பெஷல் 1:

INDIAN EXPRESS EGMONT PUBLICATION - வால்ட் டிஸ்னி's டொனல்ட் டக் - மூடு மந்திரம் (கதை எண் 1: FULL STORY).













இத்தோடு இன்னும் இரு கதைகள் உண்டு அவற்றை விரைவில் வெளியிட முயல்கிறேன்.

100th போஸ்ட் ஸ்பெஷல் 2:

கேப்டன் டைகரின் - தங்கக் கல்லறை








லக்கி லூக் கலர் காமிக்ஸ் உடன் கிடைக்கப் பெற்ற மற்றுமொரு அதிக விலை இரகசிய காமிக்ஸ். புத்தகம் தினசரி காலண்டர் அட்டை அளவு பெரியது. SCANNER -ல் அடங்கவில்லை.

P.S.: பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு சமீப காலமாக சரியாக பதில் அளிக்க முடிவதில்லை. மன்னிக்கவும் நண்பர்களே. முன்போல் நேரம் கிடைப்பதில்லை.

16 comments:

  1. 100வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சௌந்தர்.
    படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் இம்சை தாங்காமல் இட்ட பதிவிற்கு நன்றிகள் சௌந்தர்.

      //முத்து விசிறி, தமிழ் காமிக்ஸ் உலகம், காமிக்காலாஜி, முதலை பட்டாளம், Illuminati8.blogspot.in, KK அண்ணா (கனவுகளின் காதலன்), Arun - The Rising Sun"//

      முற்றிலும் உண்மை இன்னும் பல வலைபூகள் அப்பொழுது இருந்தன ஆகொதீகா ககோகாகூ வேதாவின் வலைபூ லக்கி லிமட் இன்னும் பல.

      அவர்களும் இப்ப்லோது இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறன்.

      தங்கக் கல்லறை கண்ணை பறிக்கிறது. கருப்பு பார்டர் இன்னும் மெருகேற்றுகிறது

      Delete
  2. Just missed :-) Me the second !!

    நூறாவது பதிவுல ரெண்டாவது கமெண்ட் நான்தான் :-)

    படித்துவிட்டு வருகிறேன்.

    BTW: 100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. A hundred posts speaks about your perseverance - kudos to that.Also write about the other comics you have read and review them. One post a month reviewing comics should be good.

    ReplyDelete
  4. நூறாவது பதிவிற்கு முதலில் வாழ்த்துக்களை பிடியுங்கள் . . . . .

    ReplyDelete
  5. 100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சௌந்தர்.

    ReplyDelete
  6. தங்க கல்லறை மாதிரி, ரத்தத்தடம் கதையும் வந்திருகின்றது? இருந்தால் ஷேர் செய்யுங்க. நான் கேள்விப்பட்டவரை அரிஜோனா லவ் கதைவரை உள்ளதாமே?
    (பிட் ஓகேவா?)

    ReplyDelete
  7. Saravana Rsk...
    vaazhthukkal sou... post-i padichuputtu , kannula kanneere vanthutu...na parthukkongalen....

    ReplyDelete
  8. cograts soundar. thangakallrai diff fromorijinal/

    ReplyDelete
  9. 100வது பதிவுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  10. யஷ்வந்த் . .July 30, 2013 at 8:31 AM

    கலக்கல் போஸ்ட் . . தங்க கல்லறை . . ஆஹா . . சூப்பர் . . காமிக்ஸ் சேகரிப்பாளர் என்பது உங்களுக்கு மட்டுமே பொருந்தும் . . நல்ல ,கள்ள காமிக்ஸ் அனைத்தும் வைத்திருக்கீறீரே . .

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் நண்பரே ...

    கூடிய விரைவில் பதிய போகும் ஆயிரமாவது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்


    ReplyDelete
  12. முதலில் நூறாவது பதிவு வாழ்த்துக்கள் மற்றும் இண்டியா டு டே யில் பேட்டி வந்ததற்கு தங்க கல்லறை இந்த சைசிலா ? என்ன செலவாச்சு? புத்தகம் தினசரி காலண்டர் அளவு பெரியது, ஸ்கேன்னருக்குள் அடங்கவில்லை என்றெல்லாம் கடுப்பை கிளப்பாதீர்கள். ராஜ பாளையம் வந்தால் அந்த புத்தகம் மட்டும் பார்சல் ஓகே ?

    ReplyDelete
  13. vazthukkal.
    ungal pathivukal menmelum thodarattum

    ReplyDelete