Pages

Tuesday, June 10, 2014

122 - RATATOUILLE - எவரேனும் ரசிக்கலாம் ...



பெரும்பாலும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு வரும் கார்ட்டூன் பாணி திரைப்படங்களை தரவிறக்கி பார்ப்பதில் எனக்கு பெரிய ஈடுபாடு கிடையாது. அது போலவே "RATATOUILLE" - இத்திரைப்படமும். பலமுறை இதன் தமிழ் மொழிபெயர்ப்பு DVD கண்ணில் பட்ட பொழுதும் தரவிறக்கம் செய்ததில்லை, பெரிதாக கவனித்தது கூட கிடையாது.


சில மாதங்களுக்கு முன் ஸ்டார் மூவீஸ் சேனலில் தற்செயலாக ஒரு காட்சி கண்ணில் பட்டது:

ஒரு வில்லன் கதாபாத்திரம் வழக்கறிஞர் ஒருவருடன் தன் அறையில் விவாதம் நடத்தும் காட்சி. அக்காட்சியில் அந்த வில்லன் கதாபாத்திரத்தின் முகபாவனைகளும், அசைவுகளும் என்னை மிகவும் ஈர்த்தது. எனினும் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பர இடைவேளை தொல்லைகளால் (பொதுவாக ஆங்கிலப் படத்தையோ அல்லது மனதிற்கு பிடித்தமான படத்தையோ எந்த இடைவெளியும், தொந்தரவுகளும் இல்லாமல் பார்க்கவே விரும்புவேன்.) அதனை முழுதும் பார்க்க இயலவில்லை.




சில நாட்களுக்கு முன் அத்திரைப்படம் இணையவெளியில், என் இமைகளின் இடைவெளியில் காணக் கிடைத்தேன். உடனே தரவிறக்கம் செய்து, மறுநாள் மாலையில் தனிமையில் கண்டு ரசித்தேன். வார்த்தைகளே இல்லை எனலாம். அவ்வளவு பிடித்திருந்தது.

வில்லன் SKINNER கதாபாத்திரம் என்னை கவர்ந்த விதத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. எலி - REMY, எலியின் குடும்பத்தினர், விமர்சகர் - EGO, எலியின் கற்பனையில் வலம்வரும் CHEF GUSTEAU, இளைஞன் - LINGUINI, இளைஞனின் இணை - COLETTE, என அனைத்து கதாபாத்திரங்களும் அருமை.



SKINNER, EGO ஆகியோர் பிரசன்னமாகும் வில்லத்தனமான காட்சிகளும்,  ரெமியின் குடும்பத்தினருடனான யதார்த்தமான அன்பு நிறை ததும்பல்களும், லிங்குனி மற்றும் கொலேட்டே இடையேயான காதல் காட்சிகளும் என திரைப்படம் அழகுடன் மிளிர்கிறது.




RATATOUILLE - எவரேனும் ரசிக்கலாம் ...



என்னடா திடீரென்று காமிக்ஸை விட்டு விட்டு திரைப்பட விமர்சனத்திற்கு தாவி விட்டேன் என்று எண்ணுகிறீர்களா? WAIT ...


இதோ RATATOUILLE-ன் காமிக்ஸ் வடிவம்:











RATATOUILLE-ன் COMICS தரவிறக்க சுட்டி:   RATATOUILLE.CBR


RATATOUILLE காமிக்ஸ் வடிவில் சிறப்பாக இருந்தாலும், காமிக்ஸை விட திரைப்படம் மேலும் சிறப்பாக உள்ளது ஆச்சர்யம்.


RATATOUILLE-ன் திரைப்பட தரவிறக்க சுட்டி:   RATATOUILLE


8 comments:

  1. அனிமேஷன் படங்கள் எல்லாவற்றிலும் ஒரு நல்ல கருத்தை கூறி இருப்பார்கள். அதுபோலவே இந்த படத்திலும் ”எந்த ஒரு வேலையிலும் உயர்ந்த இடத்தை யார் வேண்டுமானாலும் அடையலாம் தகுதியால் அல்ல திறமையால்” என்ற ஒரு நல்ல கருத்தை பார்பவர் மனதில் ஆழமாக பதித்து விடுகின்றனர். :)

    ReplyDelete
  2. Original DvD kidaithal parkalam
    kittathatta idhea kadhai yudan animation iladha oru padamum vanduladhu.Titlelil kooda Rat endra varthai irukkum.

    varumi karanamaga thanathu pazhaya bangaliwai virk sellum oruvanyum avn nanbanayum oru eli paduthum padu than kadhi.
    Pala twistkalaudan comedyaka padam sellum.
    peyar jabbagam illai.
    nallai Googleandavaridam ketkavendum

    ReplyDelete
  3. எனக்கு ரொம்ப பிடித்த படம். எவரேனும் ரசிக்கலாம் என்பதற்கு பதில் எல்லோரும் ரசிக்கலாம் என்றிருக்கலாம் பதிவின் தலைப்பை.

    ReplyDelete
    Replies
    1. Thanks for your valuable comments BRO :)

      எவரேனும் ரசிக்கலாம் - It was given based on a slogan in the movie :)

      Delete
  4. One of the best animated movies I have watched ever. The lady scene with critics flashback is sure to generate some tears.

    This comic I remember was also released in India by Westland, for around 195.

    @kavi; I believe you are referring to Mouse Hunt... http://m.imdb.com/title/tt0119715/

    ReplyDelete
    Replies
    1. Thanks for your valuable comments ANNA :)


      //I believe you are referring to Mouse Hunt... http://m.imdb.com/title/tt0119715/// Thanks for the information anna :)

      Delete