இரு நண்பர்களின்?! கூட்டு சதியால் இன்றுதான் ஒரே மூச்சில் படிக்க முடிந்தது. இந்தக் கதையை பேருந்தில் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கையில் படிக்க நேர்ந்தது. படம் ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்க நான் லார்கோவின் திருவிளையாடல்களில் மூழ்கிப் போனேன்.
வேட்டை நகரம் வெனிஸ்!
வழமையாக லார்கோவின் கதைகளில் வருவது போல் முகம் தெரியாத (மறைக்கப் பட்ட) ஒரு நபரின் பேரத்துடன் துவங்கும் லார்கோவின் முதல் பாகம் முழுதும் இரண்டாம் பாகத்தில் நிகழப் போகும் ACTION மேளாவிற்கு வலுவான அடித்தளமிடுவதுடன், அதற்கான காரணங்களை விளக்கும் படலமாக ஆரம்பித்து, நிறைய வசனங்களுடனும், (சில நேரங்களில் ஓரிரு வார்த்தைகளில் கூறப்படும் ஆங்கில வசனத்தை மொழிபெயர்க்கையில் அதன் அழகியல் மாறாதிருக்க நீளமான வசனங்கள் தவிர்க்க முடியாததாகிறது என்கின்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.), தவிர்க்க முடியா இரு அழகிகளுடனும் (சேரிட்டி + டொமினிகா லியோனி) அழுத்தமாக பயணிக்கிறது.
எண்ணெய் நிறுவனங்களைப் பற்றியும், 7 சகோதரிகள் பற்றியுமான விவரங்கள் மற்றும் எண்ணெய் வள அரசியல் ஆகியவை கதையோட்டத்துடன் போகிற போக்கில் பரிமாறப் படுவது ஆர்வத்தையும், ஆழ்ந்த கவனிப்பையும் ஏற்படுத்துகிறது (எனக்கு ... மற்றவர்களுக்கு எப்படியோ நானறியேன் ...). இது போன்ற ஆழமான விஷயங்கள் லார்கோவின் கதைகளில் லேசாக, சில நேரங்களில் கனமாக (உதாரணம்: NBS-ல் வெளியான "கான்க்ரீட் கானகம்" கதையில் வரும் பங்குகள் பற்றிய பகுதி.) ஊடுருவுவது லார்கோவின் கதைகளில் என்னைக் கவரும் சங்கதி. வாசகர்களாகிய நாம் எண்ணெய் வள அரசியல் விவகாரங்களில் மூழ்கிப் போனாலும் கேட்டுக் கொண்டிருக்கும் லார்கோ மட்டும் விருந்து பரிமாறும் பெண்ணுடன் தன் கவனத்தைப் பரிமாறுவதில் திவீரமாக இருப்பதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
அதன் பின் நிகழும் அடுக்குமாடி ஆர்ப்பாட்ட முடிவில் அதிரடியாக வீழ்த்தப்படும் மார்சினி மற்றும் லார்கோ இடையேயான விறுவிறுப்பான காட்சிகள் கவரக் கூடியதாக இருந்தது. குறிப்பாக அந்தக் காட்சியின் ஓவியங்கள்.
அதன் பின் டொமினிகா பார்த்தலோமியோ கோலியானி சிற்பத்தைப் பற்றியும் அதன் கம்பீரத்தைப் பற்றி வர்ணிப்பதையும், பின் அந்த வர்ணனை அப்பாகத்தின் இறுதி கட்டத்தில் லார்கோவின் கம்பீரத்திற்கு அப்படியே பொருந்தி வரும் காட்சியும் என்னை மிகவும் கவர்ந்தது.
இந்தக் கடைசிக் கட்ட காட்சியில் சேரிட்டியை மீட்கும் பொருட்டு சிங்கத்தின் வாய்க்குள் தலையை நுழைக்கவும் தயங்கமாட்டேன் என்ற லார்கோவின் வசனங்களைப் நான் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, பேருந்தில் ஓடிக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டாரின் சிவாஜி திரைப்படத்தில் "இனி என் பாதை சிங்கப்பாதை" என்று ரஜினி சொல்லும் காட்சியின் பின்னணி இசை சேர்ந்து கொள்ள லார்கோவின் கம்பீரமான அந்த இறுதிக் கட்ட காட்சிக்கு மேலும் வலுவான வர்ணத்தைக் கூட்டியது.
மொத்தத்தில் முதல் பாகம் மிக அழுத்தமாக நிறைவாகியது.
கொலையும் செய்வார் கோமான்!
இரண்டாம் பாகத்தில் கதையின் சுவாரஸ்ய முடிச்சுகள் லார்கோ மற்றும் டொமினிகா இணையும் "கலப்பினூடே",
SUSPENSE டொமினிகாவின் ஆடைகள் லார்கோவின் முன்னே அவிழ்வதைப் போல் அவிழத் துவங்குகிறது.
இரண்டாம் பாகம் முழுதும் விறுவிறுப்பான ஆங்கிலப் படம் பார்ப்பதைப் போல் சீறிச் செல்கிறது. குறிப்பாக வாள்சண்டை, வெடிகுண்டு வெடிக்காமல் தடுக்க லார்கோ பதறும் காட்சிகள். ஆனால் இரண்டாம் பாகம் கதையைப் பொருத்தமட்டில் அழுத்தம் குறைவே என்றாலும் கதை இறுதிக் கட்டத்தை நோக்கிச் செல்கையில் விறுவிறுப்பே பிரதானமாகிப் போவதால் அழுத்தம் அவசியப்படவில்லை என்றே கூறலாம்.
பட்லர் "டைலர்" கதாபாத்திரம் வில்லனாக தோன்றினாலும், சேக்ஸ்பியர் பயன்பாட்டிற்குப் பின் மனதில் மனதில் நிற்கிறார்.
மொத்தத்தில் மசாலா தூக்கலான, இருமடி வேகத்தில் இரண்டாம் பாகம்.
கதையின் முடிவில் என் எண்ணத்தில் தோன்றியது லார்கோவிற்கு "BIG THUMBS UP" என்பது மட்டுமே.
தேவையான இடங்களில் சென்சார் செய்யப் பட்டுள்ளது பாராட்டத்தக்கது.
"டெக்ஸ் வில்லர் மற்றும் டைகர் நீங்கலாகப் பார்த்தால்" லார்கோவே தற்போதைய நம்பர் ஒன் என்பதை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்துள்ளது "வேட்டை நகரம் வெனிஸ்!".
குறைகள்:
1. ஆங்காங்கே பிசிறடிக்கும் சில பக்க பிரிண்டிங் பிரச்சனைகள். போன முறை முன்னதாக வெளியிட்டதற்கு சென்னையில் நடை பெற்ற சிறிய அளவிலான புத்தகக் கண்காட்சியைக் காரணமாகக் கொள்ளலாம்.
ஆனால் இம்முறை பத்து நாட்கள் முன்னதாக வெளியிட எந்தவொரு அவசியமுமில்லாத பொழுது ஏன் இவ்வளவு அவசரமாக வெளியிட வேண்டும். பொறுமையாக சரியான நேரத்தில் நல்ல பிரிண்டிங்குடன் வெளியிடிருக்கலாமே என்ற எண்ணம் தோன்றுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
காமிக்ஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், குறித்த தேதிக்கு முன்பாக வெளிவருவதும் மகிழ்ச்சியான சேதிதான். ஆனால் அதில் குறைகள் காணப்படும் பொழுது மிகுந்த வருத்தமே மிஞ்சுகிறது. ஏனைய குமுதம், விகடன் பத்திரிக்கைகள் போல் படித்து விட்டு கடாசிவிடும் ரகமல்ல நம் காமிக்ஸ் என்பதை விஜயன் சார் நன்கு அறிந்திருந்தும் ஏன் இந்த குறைபாடுகள் தொடர்கதையாகின்றன என்பது புரியவில்லை.
2. சென்சார் செய்யும் பொழுது சில இடங்களில் TOUCH UP சரியாக இல்லாதது. உதாரணத்திற்கு:
மேலே உள்ள காட்சியில் சிவப்பு கட்டமிட்டு காட்டியுள்ள இடத்தைக் கவனித்தால் புரியும்.
3. எழுத்துப் பிழைகள் சில இடங்களில் நேர்வது இயல்பு என்றாலும் கதாபத்திரங்களின் பெயர்களில் ஏற்படும் எழுத்துப் பிழைகளை PROOF READING ல் எளிதில் திருத்த இயலும் என்பது என் எண்ணம்.
இந்தக் கதையில் விடாலி என்ற பெயர் பல இடங்களில் வந்தாலும் மொத்தத்திலே ஓரிடத்தில் மட்டும்தான் சரியாக அச்சிடப் பட்டுள்ளது. ஏனைய இடங்களில் விடி ாலி என்றே
அச்சிடப் பட்டுள்ளது.
4. மொழிபெயர்ப்பில் ஏனோ இக்கதையில் "சன்னமாய், சன்னமான, சன்னமாக" என்று மீண்டும் மீண்டும் "சன்னம்" என்ற வார்த்தை பல கதாபாத்திரங்கள், பல இடங்களில் உச்சரிப்பது நெருடலைத் தருகிறது. சில இடங்களிலாவது லேசான, சின்னதாக என்று வேறு மாற்று வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் .
அவ்வளவுதான் நண்பர்களே. அடுத்த பதிவில் பார்க்கலாம் ...
P . S .: பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு பதில் அளிக்கத் தவறிவருவது சமீப கால பதிவுகளில் தொடர்கதையாகிப் போனதால் இந்தப் பதிவிலிருந்து பழையபடி பதில் அளிக்கத் தொடங்கிடுவேன் என்றும், இதற்கு முன் முறையாக பதில் அளிக்க முடியாமல் போனதற்கு வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன் நண்பர்களே. SORRY FRIENDS.
1st....
ReplyDeleteArumayana pathivu
"Nil Kavani Sudu" patriyum oru pathivu ittu irkkalame?
வருகைக்கும் தங்களின் கருந்துக்களுக்கும் நன்றி நண்பரே.
Delete//"Nil Kavani Sudu" patriyum oru pathivu ittu irkkalame?// விரைவில் பதிவு செய்து விடலாம் :-)
விமர்சனம் சூப்பர்! ஏது ராஜ்குமாருக்கு போட்டியாக சித்திரங்களை ஒப்பீட்டு விமர்சனம் எழுத ஆரம்பித்துவிட்டீர்களே! சென்சார் செய்யபடாத சித்திரங்களை அளித்து காமிக்ஸ் கலாசார பாதுகாவலர்கள் கழகத்தின் கோபத்திற்கு ஆளாகிவிட்டீர்கள். எங்களுக்கு குஷிதான்! :)
ReplyDeleteவருகைக்கும் தங்களின் கருந்துக்களுக்கும் நன்றி நண்பரே.
Delete//ஏது ராஜ்குமாருக்கு போட்டியாக// அந்த அளவிற்கு நாம இன்னும் DEVELOP ஆகல நண்பா :-)
நேர்மையான, பாராபட்சம் இல்லாமல் குறை மற்றும் நிறைகளுடன். எனக்கும் லார்கோ கதைகளில் வரும் பின்புல வியாபார உண்மைகள் பற்றிய விபரங்கள் பிடிக்கும். அத்தகைய பின்புலமே, லார்கோ என்ற ஒருவர் உண்மையாக இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.
ReplyDeleteபிரிண்டிங் பிரச்சினைக்கு முடிவேயில்லை போல :(
வருகைக்கும் தங்களின் கருந்துக்களுக்கும் நன்றி அண்ணா.
Delete//அத்தகைய பின்புலமே, லார்கோ என்ற ஒருவர் உண்மையாக இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.// Same feeling anna :)
//பிரிண்டிங் பிரச்சினைக்கு முடிவேயில்லை போல :(// மின்னும் மரணத்தை நினைத்து இப்போதே பதறுகிறது. :( :( :(
Good in depth Post. I am not satisfied with this chapter of largo. Will post soon in my blog. :-)
ReplyDeleteGood in depth Post. I am not satisfied with this chapter of largo. Will post soon in my blog. :-)
ReplyDeleteவருகைக்கும் தங்களின் கருந்துக்களுக்கும் நன்றி நண்பரே.
Delete//Will post soon in my blog.// I am waiting ... :)