வெளிவந்த நான்கு புத்தகங்களில் நான் படித்த முதல் கதை தோர்கல்.
கதை:
இதுவரை கௌபாய் மற்றும் துப்பறியும் கதைகளையே படித்து வந்த எனக்கு (லயன் காமிக்ஸ் - மந்திரராணி தவிர) இது ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது. வண்ணக் கலவை, சித்திரங்கள் என அனைத்தும் அருமை. என்றாலும் கதை மனதைக் கவரவில்லை. ஒருவேளை இன்னும் சில கதைகளுக்குப் பின் தோர்கல் பிடித்தாலும் பிடிக்கலாம்.
தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் நேரடியாக, ஏதோ இரண்டாம் பாகத்தில் இருந்து படித்தது போன்று இருந்தது. முதல் அத்தியாயம் "வஞ்சிக்கப்பட்ட வசியக்காரி - 34 பக்கங்கள்" கொஞ்சம் விறுவிறுப்பாக போனாலும், இரண்டாம் அத்தியாயமான "ஏறத்தாள சொர்க்கம் - 14 பக்கங்கள்" துளியும் வேகமில்லை.
தோர்கல் முதல் அத்தியாயத்தில் கிழவர் வேடம் பூண்டு குதிரையை அடக்க செல்லும் காட்சி பழைய படங்களில் (படகோட்டி என்று நினைக்கிறேன்) எம் ஜி ஆர் கிழவேடமிட்டு போட்டிக்கு செல்வதை நினைவூட்டியது.
மேலும் அதலபாதாளத்தில் எசகு பிசகாக கவிழும் தோர்கள் "ஓடின்" என்ற இஷ்டதெய்வத்தின் பெயரை உச்சரித்தவுடன் தப்பித்துக் கொள்வதெல்லாம் கொஞ்சமும் நம்பும்படியாக இல்லை.
மொத்தத்தில் தற்போதைய நிலவரப்படி தோர்கல் என்னைக் கவரவில்லை. போகப் போக பிடிக்கிறதா என்று பார்க்கலாம்.
இம்முறை வெளிவந்த நான்கு புத்தகங்களின் அட்டைப் படங்களும் அருமை.
கீழே எனக்குப் பிடித்த படி வரிசைப் படுத்தியுள்ளேன்:
1. கமான்சே
2. தோர்கல்
3. ப்ருனோ பிரேசில்
4. பிரின்ஸ்
அச்சுத்தரம் 4 புத்தகங்களிலும் அருமையாக இருந்தது. முன்பு போல் எந்தக் குறைகளும் கண்ணில் படவில்லை. உண்மையிலேயே விஜயன் சார் கூறியிருந்தபடி அச்சுத் தரத்தில் குறைகள் களையப்பட்டு தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அருமையான RESULT.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ta → en
Happy Pongal to all .
Happy Pongal Soundar !
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
ReplyDelete