Pages

Wednesday, June 5, 2013

0098 - SUNSHINE LIBRARY - TEX WILLER'S NILAVOLIYIL ORU NARABALI

நண்பர்களே இந்த மாதம் வெளிவந்த நான்கு இதழ்களில் நான் முதலில் படித்தது டெக்ஸ் முதன் முதலாக வண்ணத்தில் மிரட்டிய "நிலவொலியில் ஒரு நரபலி". கதை வண்ணத்தில் பார்க்க மிக அழகாக இருந்தது. SIZE இன்னும் சற்று பெரிதாக இருந்திருந்தால் இன்னமும் அமர்க்களமாக இருந்திருக்கும்.











புத்தக தயாரிப்பு மற்றும் பிரிண்டிங் தரம் இம்முறை மிகவும் நன்றாக இருந்தது (இதே தரத்தில் டைகர் ஸ்பெஷல் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கலாம். டைகர் ஸ்பெஷல் மீது விஜயன் சார்-க்கு என்ன கோபமோ? :-(  :-)
:-) ).

கதை என்று பார்த்தால் "நிலவொலியில் ஒரு நரபலி" என்னைப் பொறுத்தவரை கொஞ்சம் சுமார் ரகமாக பட்டது. வில்லன்கள் மிகவும் யதார்த்தத்தை மீறியவர்களாக உள்ளதை அவ்வளவாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

இந்த சித்திரத்தைப் பார்த்த பொழுது, கதையைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே நம் பல கோண பதிவாளர் சகோதரர் "காமிக்ஸ்டா" ராஜ்குமார் அவர்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.



 

இந்த கதையை ILLEGAL ஆக SCANLATION பண்ண முயன்ற நபருக்கும், நான் தவறு என்று சுட்டிக்காட்டிய பொழுது உனக்கென்ன அக்கறை என்று வரிந்து கட்டிக்கொண்டு (இந்தக் கதையை எடி வெளியிட பலகாலம் ஆகும், அவர் டெக்ஸ்-ன் 600 கதைகளுக்கும் RIGHTS வாங்கியுள்ளேன் என்று உன்னிடம் சொன்னாரா? என்றெல்லாம் நக்கல் செய்த) அந்த நபருக்கு SUPPORT செய்த சிலருக்கும் என்னுடைய கேள்வி "இப்போ உங்க முகத்தை எங்க வசுப்பீங்க?"

பி.கு.: மிகவும் தாமதமான பதிவிற்கு SORRY FRIENDS. தற்பொழுது மற்ற வேலைகளோடு புதிய பணியிடத்திற்கு மாறிய பிரச்சனையும் சேர்ந்து கொண்டுவிட்டது. எனவே இனி விமர்சனப் பதிவுகள் மட்டும் இடலாம் என்று முடிவு செய்துள்ளேன். முடிந்த வரை புதிய வெளியீடு பதிவுகளும் இட முயற்சிக்கிறேன்.

5 comments:

  1. //இந்த சித்திரத்தைப் பார்த்த பொழுது, கதையைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே நம் பல கோண பதிவாளர் சகோதரர்"காமிக்ஸ்டா" ராஜ்குமார் அவர்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.//

    நன்றி நண்பரே ஒரு சித்திரத்தை பார்த்தவுடன் என் நினைவு வந்தால் I am Honoured. அந்த படத்த ஏற்கனவே நோட் பண்ணி வச்சுட்டேன். :D

    ரெண்டு டெக்ஸ் இதழ்களும் சூப்பர். இந்த இதழ் "வில்லன்னுக்கொர் வேலி " சைசில் இருந்தால் சூப்பரா இருந்திருக்கும்

    ReplyDelete
    Replies
    1. I too had thoughts about you Raj - not only for this book - the sketches in Diabolik and Pootha vEttai - expecting 3-4 articles on your blog!

      Delete
    2. @Raj Muthu Kumar S

      //அந்த படத்த ஏற்கனவே நோட் பண்ணி வச்சுட்டேன்//

      பதிவு எப்பொழுது நண்பரே ? ரொம்ப காத்திருக்க வைக்காதீர். ஏன்னா அதுக்குள்ளே டைகர் 'மின்னும் மரணம்' கலரில் வந்துடும். அப்புறம் உங்களுக்குதான் வொர்க் லோட் அதிகமாயிடும் :)

      Delete
  2. தினகரன்June 6, 2013 at 6:22 AM

    வேகமிழந்த டர்போ இஞ்சின் . . இது உங்களுக்கு அழகல்ல சௌ . . . புத்தகம் வரும் பின்னே . . உங்க பதிவு வரணும் முன்னே . . அதுதான் சரி

    ReplyDelete
  3. அழகான பதிவு . சூப்பர் :-) டயபாலிக் விமர்சனத்தை எதிர் பார்க்கிறேன்.
    - ஆழ்வார்க்கடியான் நம்பி

    ReplyDelete