நண்பர்களே இந்தப் பதிவை நான் இடுவேன் என்று நேற்றுவரை எண்ணவில்லை. நம்
அன்பிற்குரிய ஆசிரியர் திரு. விஜயன் சார் அவர்கள் ஏற்கனவே நம் லயன் முத்து
காமிக்ஸ் வலைப்பூவில் தெரிவித்திருந்தது போல் நேற்றுதான் என் திருமணம்
முடிந்தது. 7 வருட காதல் கடந்த ஓரிரு வார பிரச்சனைகளைத் தொடர்ந்து அனைவரின்
வேண்டுதல்களால் திருமணத்தில் சுபமாக முடிந்து விட்டது.
மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த அன்பு ஆசிரியர், நண்பர்கள் மற்றும்
சகோதரர்களுக்கு மிக்க நன்றி.
விரிவாக பதிவிட இயலவில்லை. மன்னிக்கவும்.
தீடீர் திருமணம் என்பதால் நண்பர்கள் பலருக்கு முன்பே தெரிவிக்க இயலவில்லை மன்னிக்கவும். இத்தோடு 2 அல்லது 3 மாதங்களுக்கு வலைப்பூ பக்கம் வருவதற்கு வாய்ப்பில்லை.
















Thanks for the Turbo Post :)
ReplyDeleteதிடீர் திருமண நல்வாழ்த்துக்கள்!
கல்யாணம் ஆனாலும் காமிக்ஸ் பதிவா... உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? :)
பார்த்து.... வீட்டுலே வெளுக்கப்போறாங்கே.. இனிமேயும் இப்படியே இருந்தா :)
சூரிய கதிர்கள் நிதம்தோறும் ஆசீர்வதிக்கவும்
ReplyDeleteநிலவொளி நிம்மதியைதரவும் ....
மீண்டுமொருமுறை மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே !
உங்களுக்கு திருமண பரிசாக ஆசிரியர் டைகரின் cc விரைந்து வெளியிடுவாராக என வேண்டுகிறேன் !
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் நண்பரே :))
ReplyDelete.
திருமணநாள் வாழ்த்துக்கள் நண்பரே!!
ReplyDeleteஇன்று போல் என்றும் வாழ்க! :) உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பொறுப்பில்லாமல் இப்படி காமிக்ஸ் பதிவு போட்டுக் கொண்டிருந்தால், உங்கள் துணைவியார் டென்ஷன் ஆகி விடப் போகிறார்! இனி உங்கள் குடுமி அம்மணியின் கையில்! பார்த்து பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள்! ;)
ReplyDelete/* பொறுப்பில்லாமல் இப்படி காமிக்ஸ் பதிவு போட்டுக் கொண்டிருந்தால், உங்கள் துணைவியார் டென்ஷன் ஆகி விடப் போகிறார்! */
Deleteஇதை நீங்க சொல்றீங்களா? :-)
VALUTHUGAL NANBARAY...
ReplyDeleteஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் சௌந்தர். கல்யாணத்தன்னிக்கும் பதிவு போடா ஆள் நீர் ஒருவர்தான். வாழ்க வளமுடன்.
ReplyDeleteடர்போ போஸ்ட் சவுந்தர், இனி உங்கள் நேரம் உங்கள் கையில் இல்லை, என்பது தெரிந்தும் இப்படி துணிகர செயலா ??? சிவகாசி அம்மணியிடம் இனி போட்டுக்குடுக்க நிறைய விஷயங்கள் இருக்கு :)
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே !!!
ReplyDeleteநானும் பல போராட்டங்களுக்கு பின்னர் காதல் திருமணம் முடித்தேன் நண்பரே...என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஅப்படியா? தங்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்!
Deleteமணவாழ்க்கை மேன்மையடைய வாழ்த்துக்கள் சௌந்தர்!! காமிக்ஸ் மீது வைத்த அதே காதலை துணைவியாரிடமும் வைத்து - விட்டுக் கொடுத்து சீரும் சிறப்புமாய் இதே நேர்மையுடன் வாழ வாழ்த்துகிறோம் - ராகவன் மற்றும் குடும்பத்தினர் !
ReplyDeleteபின்குறிப்பு:
வலைப்பதிவுக்கென மாதம் சில நாட்கள் உள்ளது நண்பரே !!
எனது மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள். திருமணத்திற்குப்பிறகும் நீங்கள் உங்கள் மனைவியிடம் உள்ள அன்பும் காதலும் காமிக்ஸ் மீது கொண்டுள்ள காதலும் இப்போதுள்ளதைப் போன்றே தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
அமர்நாத் .சேலம்.
உங்கள் திருமண வாழ்வு என்று இனிமையாக அமைய எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிமேல், வலைப்பூவிற்கு நீங்கள் இரண்டு மாதம் கழித்துத்தான் வருவீர்கள் என்பது எனக்கு சற்று வருத்தமான செய்தியாக அமைகிறது
நான் வெளிநாட்டில் வசிக்கிறேன்.
காமிக்ஸ் வெளிவரும் தினம் எனது வீட்டில் காமிக்ஸ் வந்து விட்டதா என்று கேட்பதற்கு மறந்தாலும் மறப்பேனே ஒழிய உங்களது புதிய காமிக்ஸ் வெளியீட்டின் பதிவை பார்க்க மறக்க மாட்டேன்.
புதிய காமிக்ஸ் வெளியீடு தினத்தன்று மட்டும் பதிவை செய்தால் போதும்
என்னைப்போன்று வெளிநாட்டில் வசிப்பர்வர்களுக்கு உங்களது ஸ்பீட் பதிவு, காமிக்ஸ் தாகத்தை தணிக்கிறது என்பது நூறு சதவிகித உண்மை.
தயவு செய்து, காமிக்ஸ் புதிய வெளியீடு தினத்தன்று மட்டும் உங்களது முடிவை மாற்றிக்கொள்ளுங்கள்
இணையில்லா இறைவனது பரிபூர்ண ஆசீர் தங்களது வாழ்வினை நிரப்புவதாக! வாழ்த்துக்கள் தோழா! காமிக்ஸ்ஸ மிக்ஸ் பண்ணாத வாழ்வேது நமக்கு? காமெடி பண்ணக்கூடாது சௌ! பாய் வருத்தப்படறார் பார்ங்க!
ReplyDeleteMR and Mrs சௌந்தருக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்
ReplyDelete