அட்டைப்படம்:
அட்டைப்படத்தில் டைகர் கம்பீரமாக நிற்கும் அமைப்பு அருமை. நீண்ட நேரம் மேலுறையைப் பிரிக்காமல் ரசித்துக் கொண்டிருந்தேன். புத்தகத்தின் தரம் பற்றி சொல்லவே தேவையில்லை. கலக்கல்.
எனக்கு எப்போதும் பிடித்தமான தடிமனான புத்தகம் என்பதால் மேலும் மகிழ்ச்சி. வரும் லயன் ஆண்டு மலருக்கு இதைவிட பெரிதாக ஒரு ஆண்டு மலர் வெளிவர வேண்டும் என்பது என் ஆசை.
கதைகள்:
வழக்கமாக இது போல் சிறப்பு வெளியீடுகளில் முதலில் மிதமான கதைகளாக (நகைச்சுவை) அல்லது பிடித்த நாயகர்களின் கதைகளை (டெக்ஸ், டைகர்) முதலில் படிப்பது என் வழக்கம். ஆனால் இம்முறை புத்தகத்தை வாங்கியவுடன் என் மகிழ்ச்சியை நம் அன்பிற்குரிய ஆசிரியரிடம் பகிர்ந்து கொண்டபோது அவர், . "நேரடியாக டைகர் கதைகளுக்கு ஓடாமல் (என்னைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்துள்ளார் போலும்), கதைகளை வரிசையாக படியுங்கள். கதைகளின் வரிசையை ஒரு இறுக்கமான கதை, ஒரு மிதமான கதை என்று பார்த்து பார்த்து வரிசைப்படுத்தியுள்ளேன். அதை உணர முடிகிறதா என்று பாருங்கள்" என்றார். நானும் சரி சார் என்று சொல்லிவிட்டு NBS-ன் கதைகளை வரிசையாகவே படித்தேன்.
ஆசிரியருக்கு ஒத்து ஊதுவதாக யாரும் நினைத்தால் பரவாயில்லை. வரிசையாக படிக்கும் பொழுது அவர் சொன்னது போன்ற ஒரு உணர்வு கிடைக்கப்பெற்றது. வேண்டுமானால் நீங்களும் ஒருமுறை வரிசையாக படித்துப் பாருங்கள் முதலில் ஒரு மூச்சு முட்டும் அளவிலான ACTION (LARGO) அதன் பின் நம்மை RELAX செய்ய ஒரு நகைச்சுவை (CHICK BILL) என்று ஒரு அழகிய வாசிப்பு அனுபவம் கிடைக்கும்.
ஏதோ 10 கதைகளை தேர்ந்தெடுத்தோம் வெளியிட்டோம் என்று இல்லாமல் அதை ரசித்து வரிசைப் படுத்திய நம் ஆசிரியரை நினைக்கும் பொழுது அவருக்குள் இருக்கும் தீவிர வாசகனை உணரமுடிந்தது. சூப்பர் சார்.
இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன நான் பதிவுகள் இட ஆரம்பித்து, ஆனால் இன்றுதான் வெளிப்படையாக நான் ஆசிரியரிடம் பேசினேன் என்று எழுதியிருக்கிறேன். இவ்வளவு நாள் தவிர்த்ததற்கு காரணம் நான் ஆசிரியரிடம் பேசுவதையும் சிலர் POLITICS ஆக மாற்றிவிடுவார்கள் என்பதாலேயே. ஆனால் இம்முறை POLITICS செய்தால் செய்யட்டும். எனக்கு NBS-ஆல் கிடைத்த மறக்க முடியாத வித்தியாசமான அனுபவத்திற்கு காரணம் ஆசிரியரின் வார்த்தைகளே என்பதை பதிவு செய்வது என் உரிமை.
1. லார்கோ: கான்க்ரீட் கானகம் நியூயார்க் & சுறாவோடு சடுகுடு
ACTION + BUSINESS கலந்த நேரத்துடன் கண்ணாமூச்சி ஆடும் கதை. லார்கோவின் முந்தைய வெளியீடை விட என்னை மிகவும் கவர்ந்த கதை இதுதான். என் பெயர் லார்கோ கதை கூட ஒரு HOLLYWOOD ACTION மசாலா போன்றுதான் எனக்கு தோன்றியது. ஆனால் இந்தக் கதையில் வரும் BUSINESS தொடர்பான விசயங்களும், GENTLE-ஆன சதிகளும் என்னை வாயடைக்கச் செய்துவிட்டன.
பொதுவாகவே எனக்கு யாருக்கும் அடங்காத, திமிரான, தன் விருப்பம் போல் செயலாற்றும் "டெக்ஸ், டைகர்" போன்ற கதாநாயகர்களின் மீது தனி ஈர்ப்பு அதிகம். அது போல்தான் லார்கோவும்.
வருமானவரித்துறை அதிகாரி முன் தெனாவெட்டாக மேஜை மீது கால் போட்டுக்கொண்டு பேசும் இடம் கதையில் என்னால் இனி என்றைக்கும் மறக்கமுடியாத ஒரு காட்சி.
முதல் கதையில் வரும் VARONOFF METHOD குறித்த மொழிபெயர்ப்பு மட்டும் சிறிது நாசூக்காக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமாக சொன்னால் "MISSION IMPOSSIBLE 4" படத்தில் வளைகுடா நாட்டின் மிகப்பெரிய கட்டிடத்தில் TOM CRUISE கயிறு கட்டி தூளி விளையாடும் காட்சியைப் பார்க்கும் பொழுது ஏற்பட்ட பிரமிப்பு லார்கோ கதையை முடிக்கும் போது ஏற்பட்டது.
2. சிக் பில் & Co: கம்பளத்தில் கலாட்டா
மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. வழக்கமான நம் டாக் புல் & கிட் ஆர்ட்டினின் நகைச்சுவை அதிகமில்லை என்றாலும் ஆர்ட்டின் அடிவாங்கும் காட்சிகளும், ஆர்ட்டினின் கனவுக் காட்சிகளும் சூப்பர்.
கதை இறுதிக்கட்டத்தில் பொசுக்கென்று முடிந்து விடுவதுதான் சின்ன வருத்தம்.
3. கேப்டன் டைகர்: கான்ஸாஸ் கொடூரன்
மரண நகரம் மிஸ்ஸெளரி மற்றும் கான்ஸாஸ் கொடூரன் இரு பாகங்கள் சேர்ந்த இந்த தொடர் டைகர் முன்னிலைப் படுத்தப்படாத ஒன்று. பெரும்பாலான நேரங்களில் வில்லன்கள் இருவரும் ஆடும் ஆட்டங்களை டைகர் வேடிக்கை மட்டுமே பார்க்கிறார். அதனால் எனக்கு இந்த தொடர் ஒரு ஏமாற்றமே. டைகருக்கு எதிரி டைகரே. ஏனெனில் நாம் சச்சின் இறங்கினால் CENTURY அடித்தே தீர வேண்டும் என்று எதிர்பார்ப்பது போல், டைகரின் ஒவ்வொரு கதையையும் மின்னும் மரணம் போன்ற அவரின் CLASSIC தொடர்களோடு ஒப்பீடு செய்யும் மனநிலையில் உள்ளோம்.

எனவே
யாதர்த்தமான டைகரின் இந்த தொடர் எனக்கு ஏமாற்றமே.
4. ஜில் ஜோர்டன்: அலைகளின் ஆலிங்கணம்
இவரது கதையில் என்னை மிகவும் கவர்ந்தது வண்ணங்களின் சேர்க்கை. முக்கியமாக பிண்ணனி வண்ணங்கள். கதையில் வரும் ஜோர்டனின் உதவியாளர் லிபெல் பளிச்சிடுகிறார். அவர் இன்ஸ்பெக்டர் க்ரவுட்டனை கலாய்க்கும் இடங்கள் எனக்கு பிடித்திருந்தது.
ஜில் ஜோர்டனை என்னால் ஆர்ப்பரித்து வரவேற்கவும் முடியவில்லை, வேண்டாமென்று ஒதுக்கவும் தோன்றவில்லை.
இவரின் இன்னும் சில
கதைகளைப் படித்த பிறகே முடிவெடுக்க முடியும்.
5. கேப்டன் டைகர்: இருளில் ஒரு இரும்புக்குதிரை
இந்தக் கதையின் ஆரம்பத்தில் "தற்கொலைக்கு ஒப்பான முயற்சி... பலிபீடத்தில் தலையை வைக்க யார்தான் முன் வருவார்கள்" என்ற கேள்விக்கு பதிலாக "நான் ரெடி சார்" என்று டைகர் குரல் ஒலித்த கணமே கதை பட்டையக் கிளப்பப் போகுதுன்னு முடிவு பண்ணிட்டேன். முகத்தில் ஒரு சந்தோசம், பெருமிதம் தானாக வந்து ஒட்டிக்கொண்டது.
எதிர்பார்த்தது போலவே டைகர் ஏமாற்றமளிக்கவில்லை. டைகரின் "திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதலுக்கு" இந்தக்கதை சிறந்த உதாரணம்.
இந்த ஒரு கதை போதும் அட்டைப்படத்தில் டைகர் ஏன் பிரதான இடத்தை தட்டிச் சென்றுள்ளார் என்று புரிந்து கொள்ள.

6. வேய்ன் ஷெல்டன்:ஒரு பயணத்தின் கதை & ஒரு துரோகத்தின் கதை

முதல் கதையை படித்துக் கொண்டிருக்கையில் பெரிதாக எனக்கு வேய்ன் ஷெல்டன் மீது ஈடுபாடு வரவில்லை. முதல் கதையின் இறுதி தாளை திருப்பும் முன் என் நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வர ATTEND செய்தேன். அவர் என்னிடம் "NBS முடிச்சாச்சா?" என்று கேட்க, வேய்ன் ஷெல்டன் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். எப்படி இருக்கு என்ற கேள்விக்கு "என்னங்க கதை மொக்கையா இருக்கு. 2-ஆம் பாகத்தையும் படித்து விட்டு சொல்கிறேன்" என்று கூறினேன். பேசிவிட்டு முதல் கதையின் இறுதி தாளை படித்த பின் பிடித்த வேகம் வேய்ன் ஷெல்டன் வில்லனை ட்ரக்-கால் இடித்த பின் தான் முடிந்தது. மொக்கை என்ற என் கருத்தை மாற்றிக்கொண்டேன்.
வேய்ன் ஷெல்டன் மிஸ் குட்னெஸ்-ஐ இளவரசி என்று அழைப்பது ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. இளவரசி என்பது மாடஸ்டிக்கு மட்டுமே.
வேய்ன் ஷெல்டன் = சூப்பர் ACTION.

7. மாடஸ்டி ப்ளைசி: எதிரிகள் ஏராளம்
402 வண்ண பக்கங்களை முடித்துவிட்டு கருப்பு வெள்ளை பக்கங்களுக்கு வருவது கொஞ்சம் கடினம்தான்.
மாடஸ்டி ப்ளைசியின் குறும் சாகசம். பொறுமையை சோதிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை OK ரகம்தான். நீண்ட நாட்களுக்குப் பின் வந்தாலும் மாடஸ்டிக்கு PASSMARK மட்டுமே அளிக்க முடியும்.
மாடஸ்டிக்கு வரிகளால் ஆடை வடிவமைப்பு மட்டும்தான் நெருடலாக இருந்தது. அதற்காக அப்படியே விடுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆடையின் DESIGN வேறுவிதமாக இருந்திருக்கலாம்.
NBS முழுவதையும் படித்ததில் மாடஸ்டி கதையில் மட்டுமே எனக்கு எழுத்துப் பிழைகள் நிறைய தென்பட்டன.
8. இரும்புக்கை மாயாவி: விலங்குகளா? வில்லன்களா?
இரும்புக்கை மாயாவியின் குட்டி சாகசம். இரும்புக்கை மாயாவி கதை என்பதை மனதில் வைத்துக் கொண்டு படித்தால் பிரச்சனை வராது.
மம்மி என்று கூப்பிடுவதும், நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசுவதையும் மட்டுமே பெருமையாக எண்ணுவதும், தமிழில் பேசுவதை மரியாதைக் குறைவாக நினைப்பதும் போல இரும்புக்கை மாயாவி என்றாலே முகம் சுழிப்பது ஒரு FASHION ஆகிவிட்டது நம் தமிழ் காமிக்ஸ் உலகில். அவரை ஏதோ தீண்டத்தகாதவர் வரிசையில் சேர்த்து விட்டார்கள் பலர்.
என்னைப் பொறுத்தவரை இந்தக் கதை COME BACK ஸ்பெஷலில் வந்த கதைகள் போன்று இல்லை என்று மட்டுமே கூறுவேன். பலநேரங்களில் இது போன்ற மினி கதைகள் எனக்கு பிடிக்காததும் ஒரு காரணம்.
இரும்புக்கை மாயாவி - OK.

என் தரவரிசை:
1. லார்கோ: கான்க்ரீட் கானகம் நியூயார்க் & சுறாவோடு சடுகுடு - 10/10
2. கேப்டன் டைகர்: இருளில் ஒரு இரும்புக்குதிரை - 10/10
3. வேய்ன் ஷெல்டன்:ஒரு பயணத்தின் கதை & ஒரு துரோகத்தின் கதை - 8/10
4. சிக் பில் & Co: கம்பளத்தில் கலாட்டா - 6.5/10
5. கேப்டன் டைகர்: கான்ஸாஸ் கொடூரன் - 6/10
6. ஜில் ஜோர்டன்: அலைகளின் ஆலிங்கணம - 5.5/10
7. மாடஸ்டி ப்ளைசி: எதிரிகள் ஏராளம் - 5/10
8. இரும்புக்கை மாயாவி: விலங்குகளா? வில்லன்களா?- 4/10

மொத்தத்தில் NBS எனக்கு ஒரு NEVER BEFORE அனுபவம். THANK YOU விஜயன் சார் & TEAM.

Honest review!
ReplyDeleteMy reading sequence was different and for a reason not different from what the Editor and you have said. I will write about that as a feedback here later.
விமர்சனம் அருமை! உங்கள் விமர்சனத்தையும், கார்த்திக் விமர்சனத்தையும் எதிர்பார்த்து காத்திருந்தேன்! எனது கருத்து என்னவெனில் லார்கோ, டைகர், வேய்னே மூன்றுமே சூப்பரோ சூப்பர்! அதிலும் லார்கோ, சைமன் பைக் சீன்கள், வேய்னே நண்பர்களின் தியாகங்கள், அதற்கு வேய்னேவின் பழிவாங்கல்(இந்த இடத்தில் என்னையும் அறியாமல் சந்தோஷத்தில் கத்திவிட்டேன்!), அப்புறம் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், நம்ம டைகரின் சாகஸம்( இதிலும் அந்த காயம்பட்ட நண்பரின் ரயில் இஞ்சினை மோதசெய்யும் உயிர்தியாகம் சோகமாக இருந்தது.:( மாடஸ்டி கதையும், இரும்புகை மாயாவியும் ஓகே ரகம்! சிக்பில் கதையில் கடைசியில் முஸ்தபா தன் மகனிடம் கூறும் வசனங்கள் டச்சிங்காக இருந்தது. ( கெட்டவர்களை அழித்தாலும், அதனை வெளியில் சொன்னால் கொலை என்றுதான் சட்டம் தன் பார்வையால் அவர்களை நோக்கும் என்பதை அறிந்த ஒரு சிறுபான்மை வியாபாரியின் எண்ணங்கள்)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே
Deleteஅருமையான ரிவ்யு சௌந்தர் . லார்கோவை ஒப்பிடும் போது ஷெல்டன் கொஞ்சம் விறுவிறுப்பு கம்மிதான். ஆனாலும் என்னமோ அவரைப் பிடித்து போகிறது. டைகர்ரின் கதையில் விறுவிறுப்பு இல்லை, யுக்திகளும் கம்மிதான். சிக்பில் சிரிக்க வைத்தார். ஜில் ஜோர்டான் விட்டு பிடிக்கலாம். அவரின் டெபுடியின் கலாய்த்தல் எனக்கும் பிடித்திருக்கிறது.
ReplyDeleteஅருமையான விமர்சனம்..
ReplyDeleteஉங்களின் மார்க் என்னுடையதுடன் ஒத்துப்போகின்றது.
லார்கோவின் முதல் பாகமும் எனக்குப் பிடித்த ஒன்றே.. இந்த பாகத்தில் “நீ ஒரு சண்டைக்கோழி லார்கோ” என்ற இடத்தில் பின்னிட்டார் லார்கோ.
கா.கொ.. டைகரின் செயல்கள் கம்மியே.. ஆனாலும்.. தரம் நன்றாகவே இருந்தது.
இரும்புக் குதிரை.. டாப் க்ளாஸ்.. என்ன ஒரு வேகம் கதையில்.. டைகர் சோடை போவதில்லை.. என்றும் :)
எடிட்டர் சொன்ன ஆர்டரில் படிக்கவில்லை. அந்த ஆர்டர் படி படிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை.. இன்று தான் ரஃபீக் வீடியோவில் பார்த்தேன்..
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே
Delete"வேய்ன் ஷெல்டன் மிஸ் குட்னெஸ்-ஐ இளவரசி என்று அழைப்பது ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. இளவரசி என்பது மாடஸ்டிக்கு மட்டுமே."
ReplyDeleteDear Soundar,
Good review.. You are right.
நானும் உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.
Regards,
Mahesh
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே
Deleteநல்ல விமர்சனங்கள் சௌந்தர்.
ReplyDeleteஉங்களுடய வரிசை என்னுடையதை ஒத்து போகிறது.
ஒரு சிறு மாற்றம் ஜில் ஜோர்டான் நமது சிக் பில் ற்கு முன் வந்துவிடுகிறார்.
அதற்கு பெரும் காரணம் சற்று குறைவான நகைச்சுவை மற்றும் இறுதிக்காட்சி.
எனக்கு என்னமோ ஜில் ஜோர்டான் நம்ம ரிப் கிர்பி போல ஒரு எதார்த்தமாக இருக்கிறது.
மற்றும் Wayne ற்கும் நான் 10/10 அளிக்கிறேன்.
Deleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா
Deleteலார்கோ படித்து விட்டேன் - அட்டகாசம்! :)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே
Delete