Pages

Saturday, December 29, 2012

0079-UNCLE SCROOGE - YAR PIRABALAM

WALT DISNEY 
அங்கிள் ஸ்க்ரூஜின் யார் பிரபலம்?




Cover Scan வழங்கிய "MUTHU FAN" அவர்களுக்கு நன்றி


டக்பர்க் நகரில் பெரும்புள்ளி நம் அங்கிள் ஸ்க்ரூஜ். ஒரு நாள் தெருவில் அழகு நடைபயின்று கொண்டிருக்கும் பொழுது நகரபிரஜை ஒருவர் அங்கிளின் "ஆட்டோகிராப்" கேட்டு அவரை அணுகுகிறார். அங்கிள் ஸ்க்ரூஜ் பெருமையுடன் கையொப்பமிட எத்தனிக்கும் பொழுது அந்த பிரஜை அந்த வழியாக வந்த பிரபல கால்பந்தாட்ட வீரரிடம் ஆட்டோகிராப் பெற ஓடிவிட அங்கிள் ஸ்க்ரூஜிக்கு பெருத்த அவமானமாகிவிடுகிறது.










கோபத்துடன் அங்கிள் ஸ்க்ரூஜ் தன் கம்ப்யூட்டரை அணுகி டக்பர்க் நகரிலேயே பிரபலமான நபர் யார் என்று வினவுகிறார். உண்மையான தகவலை சொன்னால் அங்கிள் ஸ்க்ரூஜ் என்னவிதமாக எதிர்வினை புரிவார் என்று புரிந்துவைத்துள்ள கம்ப்யூட்டர் வினாவிற்கான விடையைப் பகிரத் தயங்குகிறது. இதனை அங்கிள் ஸ்க்ரூஜிடம் கூறும் கணிப்பொறியாளர் தானே கூறுகிறார். கணினியின் கணக்குப் படி பிரபலங்கள் பட்டியலில் அங்கிள் ஸ்க்ரூஜிக்கு 11 வது இடம்தான் கிடைக்கிறது. முதல் 10 இடங்களையும் அந்நகரின் விளையாட்டு வீரர்கள் தட்டிச் சென்றுவிடுகிறார்கள். கணினியின் முடிவை சகிக்க முடியாத அங்கிள் ஸ்க்ரூஜ் கணிப்பொறியாளரை துவைத்து காயப்போடுகிறார்.


பின்னர் தன் பணத்தின் மூலம் தானும் பிரபல விளையாட்டு வீரராக முயல்கிறார். பல்வேறு முயற்சிகளுக்குப் பின் நம் அங்கிள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நிரந்தர உறுப்பினருக்கான தகுதியைப் பெறும் நிலைக்கு ஆளாகிறார். இறுதியாக தன்னிடம் காசு கொடுத்தால் கூட ஆட்டோகிராப் வாங்க ஆளில்லையே என்று நொந்து போய் இருக்கும் அங்கிள் ஸ்க்ரூஜை அவரது அக்கௌன்டன்ட் சந்தித்து இன்று சம்பள தினம் என்று நினைவூட்டுகிறார்.




பின்னர் தன்னை ஈடிணையற்ற பிரபலமாக கொண்டாடி மகிழும் தன் அலுவலக ஊழியர்களுக்கு சம்பள ரசீதில் இஷ்டத்திற்கு ஆட்டோகிராப் போட்டுத் தள்ளுகிறார் அங்கிள் ஸ்க்ரூஜ். இப்பொழுது சொல்லுங்கள் யார் பிரபலமென்று - இந்த வாக்கியத்துடன் கதை நிறைவுபெறுகிறது.


இந்தக்கதை மினி லயன் சம்மர் ஸ்பெஷலில் வெளியானது. ஆண்டு நினைவில்லை. புத்தகத்தின் அட்டைப்படம் மிஸ்ஸிங். SORRY FRIENDS :-)


இதுபோக அங்கிள் ஸ்க்ரூஜுன் நாணயப் போராட்டம் மற்றும் நடுக்கடலில் எலிகள் இரண்டும் கைவசம் உள்ளன. விரைவில் பதிவிட முயல்கிறேன்.


11 comments:

  1. பழைய நினைவுகளை மீட்டுயடுத்தற்க்கு நன்றி...

    ReplyDelete
  2. நல்லப்பதிவு. கதையை பரியும்படி தெளிவா எழுதியிருக்கிங்க. சூப்பர்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு சௌந்தர்.
    இதுவரைக்கும் ஒரு கதை கூட படித்ததில்லை.
    படிக்க வாய்பளிததர்க்கு நன்றி.

    தமிழ்,ஆங்கிலம் தெரிகிறது,மற்ற மொழிகள் எவை.

    ReplyDelete
  4. இருவண்ண நினைவுகள் :)

    பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி!

    தொடரட்டும் உங்களது சேவை...

    ReplyDelete
  5. ம்ம்ம்... மினிலயன் எனக்கு இன்றும் கனவாகவே உள்ளது. எப்போது மறுபதிப்பு வரும் என காத்து கொண்டு இருக்கின்றேன்.

    ஆனால் ஒரு நாணயபோராட்டம் கதையை சிறுவயதில் படித்துள்ளேன்.

    ReplyDelete
  6. பச்சை கலர் பக்கங்கள் பார்க்க நன்றாக உள்ளன

    ReplyDelete
  7. நண்பர் புனித சாத்தான் தயவில் நாணயக் கதை படிச்சிட்டேன் ஜி! நன்றி!

    ReplyDelete
  8. //நண்பர் புனித சாத்தான் தயவில் நாணயக் கதை படிச்சிட்டேன் ஜி! நன்றி!//

    நானும் அப்படியே வழிமொழிகிறேன் .... அருமையான கதை நாணய போராட்டம் ...

    ReplyDelete
    Replies
    1. வாங்க புளுபெர்ரியாரே! உங்க தயவுக்கும், அன்புக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றிகள்! ஹி! ஹி! ஹி!

      Delete
  9. நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  10. கருத்துக்களைப் பதிவு செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள். நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete