Pages

Monday, November 5, 2012

0067-THANKAK KALLARAI REVIEW - தோற்கடிக்கப்பட்ட டைகர்

நண்பர்களே "தங்கக் கல்லறை" புத்தகம் வருமுன் அதற்கு இப்படியொரு விமர்சனம் நான் எழுத வேண்டிய நிலை வருமென்று கனவிலும் நினைத்ததில்லை.
 முதலில் இந்தப் புத்தகத்தின் நிறைகளைக் கூறிவிடலாம்:

"தங்கக் கல்லறை"  மறுவெளியீடு தரமான தாளில், வண்ணமயமாக அழகாக வெளியாகியுள்ளது. தங்கக் கல்லறையை கலரில் பார்க்க வேண்டும் என்ற நம் ஆசைக் கனவு நனவாகியுள்ளது. கருப்பு வெள்ளையில் பார்ப்பதை விட முழு வண்ணத்தில் பல காட்சிகளின் உண்மையான அழகை முழுமையாக உணரமுடிகிறது.


அத்தோடு,


தங்கக் கல்லறை முதல் வெளியீட்டில் இரண்டாம் பாகம்
பக்கம் 72-ல் ஒரு சிறிய பிழை இருந்தது. அது இந்த இதழில் களையப்பட்டுள்ளது.

அது என்னவென்றால்...


கீழே சுட்டிக்காட்டப் பட்டுள்ள படத்தில் உள்ள "யா யா" என்ற ஓலம் லக்னரால் ஏற்படுத்தப்படும் சத்தமாக சித்தரிக்கப் பட்டிருக்கும்.


இரண்டாம் பாகம், பக்கம் 72-ஆம் பக்கத்தில் கஸ்டாப் (டூப்ளிகேட் லக்னர்) அந்த குழிக்குள் இருந்து லக்னரின் சத்தம் ("யா யா") வருவதாக எண்ணிக்கொண்டு கவனமாக அதை நெருங்குவதாக ஒரு காட்சி, அப்போது லக்னரின் கை கஸ்டாப்பின் பின்னால் நேர் மேலே ஒரு பரணில் காட்டப் பட்டிருக்கும். எனவே லக்னர் அந்த பரணில்தான் இருக்கிறார். குழிக்குள் இருந்து அவரால் சத்தம் எழுப்ப இயலாது. ஆனால் முதல் வெளியீட்டில் தவறுதலாக "க்ரீக்" என்பதற்கு பதிலாக "யா யா" என்று இருப்பதால் இந்த இடத்தில் லக்னர் குழிக்குள் இருந்து ஓலம் இடுவதையே குறிக்கும். ஆனால் அவர் வெளியே இருக்கும் போது அதற்கு வாய்ப்பில்லை.

ஆங்கில வடிவில் அந்த இடத்தில் க்ரீக் என்ற சத்தமே இருக்கும். இது குழிக்குள் உள்ள பிணத்துடன் கட்டப்பட்டுள்ள பல்லியின் அசைவினால் எழும் சத்தமே. இந்த தவறு மறு வெளியீட்டில் களையப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

கருப்பு வெள்ளையில் வெளிவந்துள்ள திகில் 2 கதைகள், திகில் 1-ஐ விட நன்றாக உள்ளது என்பது என் தனிப்பட்ட எண்ணம்.


புதிய வெளியீடுகள் பற்றிய அறிவிப்புகள் அனைத்தும் அருமை.

 

சரி இனி குறைகளைப் பற்றி பார்க்கலாம்:

"தங்கக் கல்லறை" கதை ஏற்கனவே நீங்கள் அறிந்ததே என்பதால் அறிமுகம் தேவையில்லை. முத்து காமிக்ஸின் "கிளாசிக்" பட்டியலில் தனி இடம் பெற்ற கதை "தங்கக் கல்லறை".

இவ்வளவு மின்சார வெட்டிலும் சொன்ன தேதியில் புத்தகத்தை வெளியிட்ட நம் லயன் காமிக்ஸ் அணியின் உழைப்பிற்கு நம் பாராட்டுக்களைத் தெரிவித்தே ஆக வேண்டும். பல நாட்கள் சரியான நேரத்தில் சாப்பிடுவதைக் கூட மறந்து உழைத்திருப்பதை நேரில் அறியும் பொழுதுதான் அவர்களின் அர்பணிப்பான உழைப்பை உணரமுடிகிறது.


ஆனால் ஜீவனான மொழிபெயர்ப்பே பிரச்சனை என்பதால் அவர்களின் அவ்வளவு உழைப்பும் வீணாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.


தங்கக் கல்லறை முதல் வெளியீட்டில் உள்ள மொழிபெயர்ப்பின் தரத்தோடு ஒப்பிட்டால், மறுபதிப்பின் மொழிபெயர்ப்பு கதையின் உயிரோட்டத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது என்றே சொல்லவேண்டும்.


இப்போதுதான் முதன் முறையாக தங்கக் கல்லறை படிப்பவர்களுக்கு இந்த வெளியீடு முழு திருப்தியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஏற்கனவே டைகரின் "தங்கக் கல்லறை" முதல் வெளியீட்டையும், மின்னும் மரணம், இரத்தக் கோட்டை போன்ற அருமையான மொழிபெயர்ப்பில் வெளிவந்த டைகர் கதைகளையும் படித்த என் போன்ற வாசகர்களுக்கு இந்த மறுபதிப்பின் மொழிபெயர்ப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தையே வழங்கியுள்ளது.


டைகர் கதையை நம் வாசகர்கள் அனைவரும் பல முறை மீண்டும் மீண்டும் படித்திருப்பார்கள். ஒவ்வொரு வசனமும் மனதில் தங்கிப் போனவை. புதிய வெளியீட்டில் எந்தெந்த இடங்களில் வசனங்கள் மாற்றப் பட்டுள்ளது, எந்தெந்த இடங்களில் பழைய வசனங்கள் சிறு மாறுதல்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை முந்தைய வெளியீட்டைப் பார்க்காமலேயே டைகர் விசிறிகளால் எளிதாகக் கண்டறிய முடியும். இது பெருமைக்காக சொல்வது அல்ல. லயன் மற்றும் முத்து காமிக்ஸின் முந்தைய மொழிபெயர்ப்பின் வீச்சு அந்த அளவிலானது. எனவே முந்தைய வெளியீடு கையில் இல்லாமல் கூட இப்போதுள்ள மொழிபெயர்ப்பு நெருடலை உண்டாக்கியிருக்கும் என்பது நிச்சயம். 

ஆசிரியரால் முதலில் வெளியிடப்பட்ட மாதிரி.தற்போது புத்தகத்தில் வந்துள்ள முதல் பக்கம். முதல் பக்கத்திலேயே எழுத்துப் பிழை "டைகர் தோன்றும்" என்பதற்கு பதிலாக "டைகர் தோற்றும்" என்று உள்ளது. அத்தோடு முதல் பத்தியிலேயே "பணத்தாசை பிடித்த வேட்டையர்கள்" என்பதற்கு பதிலாக "பணத்தாசை படித்த வேட்டையர்கள்" என்று உள்ளது.கீழே என்னை மிகவும் ஏமாற்றத்துக்குள்ளாக்கிய மொழிபெயர்ப்பின் சில மாதிரிகளை பட்டியலிட்டுள்ளேன்: மேலே உள்ளவற்றில் கருப்பு வெள்ளையில் உள்ள மொழிபெயர்ப்பின் அழகே தனி.

 மேலே உள்ளவற்றில் பார்னெட் பேசும் வசனத்தை ஒப்பிடுக


டைகர் "கண்ணா" என்று பேசுவது மிகப்பெரிய நெருடல்டைகரிடம் செமத்தியாக வாங்கிய உதார் பேர்வழி கோலே மூக்கில் இரத்தம் வழியும் நிலையில் "பொறு மகனே" என்பது சுத்தமாக ஒட்டவில்லை.


 
புதிய மொழி பெயர்ப்பில் கோலே பேசும் வசனத்திற்கு டைகர் சொல்லும் பதில் மிகவும் பணிவான நடையில் உள்ளது. இது டைகரின் ஆக்ரோஷ மனநிலையை வெளிப்படுத்தத் தவறுகிறது அதோடு கோலேவிடம் அடங்கிபோவது போல் உள்ளது. அதே கருப்பு வெள்ளையில் கவனியுங்கள் "எனக்கே நீ சொல்லித் தர்றியா?" எப்படி பொருந்துகிறது என்று கவனிக்கவும். 


வெட்டியான் வெட்டியாக வெட்ட வெளியிலே .... - மொழிபெயர்ப்பு வெறுப்பேற்றுகிறது. கருப்பு வெள்ளையே நன்றாக உள்ளது.

உயிர் பிழைப்பதே கேள்விக்குறியாக உள்ள நிலையில் ஜிம்மி "ஹை ஜாலி ஜாலி" என்பது எப்படி அவன் நிலையை உணர்த்தும்?

வெட்ட வெளியில் பாலைவனத்தின் கொளுத்தும் வெய்யிலில் சித்திரவதை செய்யப்படும் ஜிம்மியால் "என் செல்ல பாஸ் என்று எப்படி கொஞ்ச முடியும்?"


மண்டைதொலியை உரிக்க செவ்விந்தியக் கூட்டம் வந்து கொண்டிருக்கையில், அவர்களிடம் மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்ற மனநிலையில் "நான் இங்கே கொஞ்சம் ஆட்டம் போடுகிறேனே என்று பேச டைகரால் எப்படி முடியும்?"
கீழே உள்ள இரு படங்களில் முதல் படத்தில் வாலியும், இரண்டாம் படத்தில் லக்னரும் பேசும் வசனங்கள் மட்டுமே புதிய மொழிபெயர்ப்பில் என்னை ஈர்த்தவை (மொத்த புத்தகத்தில் இரண்டே இரண்டு இடங்கள்). மற்ற இடங்களில் எல்லாம் பலூனுக்குள் அடைக்க முடியாத ஒரே காரணத்தால் வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன அல்லது வெட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் பலூனுக்குள் அடங்கும் பொழுது மட்டும் பழைய வசனங்கள் அப்படியே பயன்படுத்தப் பட்டுள்ளன.
லயன் மற்றும் முத்து காமிக்ஸின் ஆணி வேராக நான் நினைப்பது மொழிபெயர்ப்பின் தரமே. ஆனால் இப்போது ஆணிவேரே ஆட்டம் காண்பதற்கு என்ன காரணம்?


1. தற்போதுள்ள புதிய முறைக்கு நாம் இப்போதுதான் பழகி வருவது. நாம் நினைக்கலாம் அதுதான் இத்தனை வெளியீடுகள் வந்து விட்டதே இன்னமுமா பழகவில்லை என்று. ஆனால் உண்மை நிலை குறைந்தது 1 அல்லது 2 வருட அனுபவத்திற்கு பிறகே தவறுகள் சரியாகும்.


2. அதனாலேயே இன்னமும் நாம் "பலூனுக்குள்" வசனங்களை அடைக்க திணறுகிறோம். பலூனுக்குள் ஏன் வசனங்களை பொறுத்த முடியவில்லை?


எனக்கு தெரிந்த இரண்டு காரணங்கள்


(a) ஒரிஜினல் புத்தகத்தை விட நம் வெளியீடுகளின் வடிவம் சற்றே சிறியது. அதனால் ஏற்கனவே இருக்கும் அளவிலிருந்து "பலூனின்" அளவு மேலும் சிறிதாகவே வாய்ப்புள்ளது.


(b) பல இடங்களில் ஆங்கிலத்தில் இரண்டு வரியில் சொல்வதை நம் மொழியில் நான்கு வரிகளில் சொல்ல வேண்டிய நிலை. இந்த நிலையில் ஏற்கனவே சிறிதான பலூனில் எப்படி வசனத்தைப் பொருத்துவது. எனவே சுருக்கமாக மொழிபெயர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.


3. தற்போதைய மொழிபெயர்ப்பாளர்களின் நிலை.


இப்போதுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களால் முடிந்த அளவு சிறப்பாக செய்ய முயன்றாலும் நாம் எதிர்பார்ப்பது வராமல் போவதற்கு காரணம் அவர்கள் காமிக்ஸ் படித்த அனுபவம் இல்லாதவர்கள். ஆனால் வேலைக்கு ஆட்களே கிடைக்காத ஒரு சூழ் நிலையில், கிடைத்த அவர்களை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்றுதான் தற்போது பார்க்க முடிகிறது.


4. சொன்ன தேதியில் தாமதமின்றி வெளியிட வேண்டும் என்ற துடிப்பு ஏற்படுத்தும் அவசர நிலை (இதற்கு நம் வற்புறுத்தல்களும் ஒரு காரணம்.).


முன்னர் சில கதைகள் உருவாக்கத்தில் தாமதாமானால் ஆசிரியர் வேறு கதையை இடையே வெளியிட்டு விட்டு அந்தக் கதையை அடுத்து வரும் மாதங்களில் வெளியிடுவார்.


ஆனால் இப்போதோ குறித்த நேரத்தில் (இவ்வளவு கொடூரமான மின்தட்டுபாட்டிற்கிடையே) அறிவிக்கப் பட்ட வெளியீட்டை வெளியிட வேண்டும் என்று முனைவது இது போன்ற சறுக்கல்களுக்கு மேலும் வித்திடுகிறது.


என்னைப் பொறுத்தவரை இந்த இதழ் மிகப் பெரிய ஏமாற்றமே (மொழிபெயர்ப்பு மோசம் என்ற ஒரே காரணத்தினால்). இந்த இதழ் நன்றாக ஜோடனை செய்யப்பட்ட முழு அழகுடன் கூடிய "உயிரில்லாத மணப்பெண்" என்றுதான் சொல்வேன்.


இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்க ஆசிரியர் உடனடியாக மாற்று வழி கண்டறிய வேண்டியது அவசியம். மற்ற தமிழ் காமிக்ஸ்கள் காணாமல் போனதற்கும், நம் லயன் முது காமிக்ஸ் மட்டும் தாக்குபிடித்து நிற்பதற்கும் முக்கிய காரணமே மொழிபெயர்ப்பின் தரம்தான்.

வண்ணம் மட்டுமே போதுமென்றால் இந்த்ரஜால் போதுமே.


லயன் மற்றும் முத்து காமிக்ஸை மற்ற தமிழ் காமிக்ஸ்களில் இருந்து தனித்துக் காட்டுவது மொழிபெயர்ப்பின் தரமே. அதில் கவனமில்லாமல் இருத்தல் மிகவும் பெரிய பிரச்சனைகளில் கொண்டு போய் விட்டுவிடும். எழுச்சி பெற்ற வாசகர்களின் ஆர்வம் மிக விரைவில் காணாமல் போய்விடும். ஆசிரியர் அவர்கள் இந்த விசயத்தில் இப்போதே கவனம் செலுத்தினால் நல்லது.


இவையாவும் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டிய, சரிசெய்ய முடியக்கூடிய பிரச்சனைகள்தான். நம் கருத்துக்களுக்கு மதிப்பளித்து நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ள நம் ஆசிரியர் இவற்றையும் விரைவில் சரி செய்வார் என்று நம்புவோம். ஆனால் அதற்கு சில மாத கால அவகாசம் தேவைப்படும். நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.

32 comments:

 1. எனக்கு இன்னும் புத்தகம் வரவில்லை.

  முதல் பதிப்பு புத்தகம் நான் இதுவரை படிக்கவில்லை. ஆதலால் இந்தக் கதை எனக்கு திருப்தியளிக்கும் என நினைக்கிறேன்.

  //"பணத்தாசை பிடித்த வேட்டையர்கள்" என்பதற்கு பதிலாக "பணத்தாசை படித்த வேட்டையர்கள்" என்று உள்ளது.

  மேலே நீங்கள் சொன்ன தவற்றை தவறு எனக் கண்டு கொள்ள நான் 10தடவை படித்தேன்.. என்ன தவறு என்றே தெரியவில்லை :-).


  மேலும்.. கருப்பு / வெள்ளையில் பலூன்களின் சைஸை இஷ்டத்திற்கு அட்ஜெஸ்ட் செய்துள்ளனர். ஆனால் இது கலர் பிரிண்ட் என்பதால் ஒரிஜினல் பலூன் சைஸிலேயே பிரிண்ட் ஆகியுள்ளது. இதுவே புதிய மொழியாக்கத்திற்கு காரணம் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 2. சொல்ல மறந்துவிட்டேன்.. இதுவரை நான் இந்தக் கதையைப் படிக்காததால் இந்தப் பதிவை முழுவதும் படிக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அண்ணா.

   தாங்கள் தற்போது புத்தகம் கைவரப் பெற்றிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். "தங்கக் கல்லறையை" முழுமையாக ரசித்து மகிழ வாழுத்துக்கள்.

   //மேலும்.. கருப்பு / வெள்ளையில் பலூன்களின் சைஸை இஷ்டத்திற்கு அட்ஜெஸ்ட் செய்துள்ளனர். ஆனால் இது கலர் பிரிண்ட் என்பதால் ஒரிஜினல் பலூன் சைஸிலேயே பிரிண்ட் ஆகியுள்ளது. இதுவே புதிய மொழியாக்கத்திற்கு காரணம் என நினைக்கிறேன். // Fact :)

   Delete
 3. சூப்பர் பதிவு. இன்னமும் புத்தகம் வந்து சேரவில்லை அடியேனிற்கு. முந்தைய புத்தகத்தையும் வாசித்ததில்லை. ஆகவே புத்தகம் வரும் வரையும் வெயிட்டிங்.

  சில வேளை நீங்கள் சொன்னபடி முதற்றடவை வாசிப்பதால் திருப்தியளிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.

   //சில வேளை நீங்கள் சொன்னபடி முதற்றடவை வாசிப்பதால் திருப்தியளிக்கலாம்.// Kandippaaga thirupthiyalikkum :)

   Delete
 4. கம்பேக் ஸ்பெஷலில் வந்த பிரின்ஸ் கதையில் உபயோகப்படுத்தப்பட்ட font சற்றே சிறியது / அல்லது bold கிடையாது. அதையே உபயோகப் படுத்தியிருந்தால், இன்னும் நிறைய இடம் கிடைத்திருக்குமோ ?

  ReplyDelete
 5. மொழிபெயர்ப்பை எவ்வளவு ரசித்திருக்கிறீர்கள்!!!!

  // லயன் மற்றும் முத்து காமிக்ஸை மற்ற தமிழ் காமிக்ஸ்களிலிருந்து தனித்துக் காட்டுவது மொழிபெயர்ப்பின் தரமே//

  நிறையவே யோசிக்க வைக்கும் அப்பட்டமான உண்மை இது!

  இன்னும் கொஞ்சம் யோசிப்போம். இந்த விஷயத்தில் எடிட்டரின் நிலைப்பாடை அறிந்திடவும் ஆவல்!

  ReplyDelete
  Replies
  1. 5 புத்தகங்கள் வாங்கும் அளவுக்கு மிகத் தீவிர டைகர் ரசிகர்.. அதனால் மிகப் பெரிய ஏமாற்றமே அவருக்கு :(.. நானும் டைகரின் ரசிகர் (மிகத் தீவிர இல்லை) என்பதால் சிறிதளவே ஏமாற்றம்..

   Delete
  2. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.

   //இன்னும் கொஞ்சம் யோசிப்போம். இந்த விஷயத்தில் எடிட்டரின் நிலைப்பாடை அறிந்திடவும் ஆவல்!// Vijayn sir will take care of our points surely.

   Delete
 6. அருமையான பதிவு! அதிலும் புயல் தேடிய புதையலில் சவப்பெட்டிக்கு டைகரை அளவு எடுக்கும் டெயிலரை Translator ஆக காட்டியது ஹி..ஹி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே

   Delete
 7. உங்கள் மனக்குமறலின் வெளிப்பாடு.
  நம்மை போன்ற லயன் நலம்விரும்பிகளின் வேண்டுகோளிற்கு ஆசிரியர் செவி சாய்க்க வேண்டும்.
  உங்கள் கருத்தை அவர் வலைபூவிலும் கூறுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா.

   //உங்கள் கருத்தை அவர் வலைபூவிலும் கூறுங்கள்.//கூறிவிட்டேன் :)

   Delete
 8. நண்பரே, அன்பரே,

  தாங்கள் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சிடபட்டிருக்கும் காமிக்ஸ் டைம் படித்தீர்களா, படிக்கவில்லையென்றால் மீண்டும் ஒரு முறை ஐந்தாவது பத்தியயை ஒரு முறை படிக்கவும், தங்களை போன்ற விமர்சகர்களுக்கு நமது அசிரியர் அவர்கள் முன்பே அளித்த தீர்கதரசி பதிலை. தையவு செய்து படித்துவிட்டு பதில் குறவும்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே

   நண்பரே நம் முந்தைய பதிவை கொஞ்சம் படித்துப் பாருங்களேன். அதோடு ஹாட் லைன் மற்றும் காமிக்ஸ் டைம் பற்றிய என் கருத்துக்களை இந்த பதிவில் (http://tamilcomics-soundarss.blogspot.in/2012/06/new-release-detective-jerome.html) நீங்கள் படித்திருந்தால் என்னை பார்த்து இந்தக் கேள்வியை உங்களுக்கு கேட்க தோன்றியிருக்காது.

   உங்கள் அனைவரையும் விட நான் பிறந்த என் சொந்த ஊரின் காமிக்ஸ் மீது எனக்கு அக்கறை அதிகம் நண்பரே.

   Delete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் ஸ்டீல் க்ளாவின் ஆதங்கத்தில் அர்த்தம் இருக்கிறது!

   நம் நண்பர்களின் வலைப்பூக்களில் பலவற்றை நம் மரியாதைக்குரிய எடிட்டர் சத்தமில்லாமல் பார்வையிட்டு வருகிறார் என்று கேள்விப்பட்டேன். விளையாட்டான தமது கமெண்ட்டுகள் அவருக்கு வேதனையளித்துவிடக் கூடாது நண்பர்களே!

   Delete
  2. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே

   //இதை விட கேவலமாக யாரும் கூற முடியாது !மன சாட்சி இருந்தால் இந்த கம்மண்டை தூக்கி விடுங்கள் !//நம்மைப் போல் நண்பர் "Raj Muthu Kumar S" நம் காமிக்ஸ் மீது நிறைய ஆர்வம் உள்ளவர் நண்பரே. இது அவர் அறியாமல் எழுதிருப்பாரே ஒழிய, நீங்கள் பார்க்கும் பார்வையில் எழுதியிருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.

   //150 பக்க புத்தகத்தில் இது போல விளக்கெண்ணை விட்டு பார்ப்பதற்கு பதில் ரசிக்கலாமே,100 சதம் பெர்பெக்ட் இதழ் ஒன்றை காட்டுங்களேன் !மொழி பெயர்ப்பு அப்படி என்ன மோசமாகவா உள்ளது !// உங்கள் கருத்துக்களை நான் மதிக்கிறேன். நண்பரே தங்கக் கல்லறை முதல் பதிப்பு, மின்னும் மரணம், இரத்தக் கோட்டை ஆகியவற்றை ஒருமுறை படித்துவிட்டு மீண்டும் தங்கக் கல்லறை மறுபதிப்பை படியுங்கள் நான் கூறும் கருத்துக்கள் புரியும். டைகர் கதைகளை அடிக்கடி படித்ததால் எனக்கு தோன்றிய தோன்றிய கருத்துக்களே இவை.

   அனைவருக்கும் புத்தகம் முழு திருப்தி எனில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே :-)

   எனக்கு தோன்றிய இக்கருத்துக்களுக்கும் நம் ஆசிரியரே காரணம். அவர்தானே எனக்கு முந்தைய வெளியீடை அறிமுகம் செய்தது. நம் ஆசிரியர் அவரது வாசகர்களை எண்ணி உண்மையில் பெருமிதம் கொள்ளலாம்.

   நண்பர் ஸ்டீல் கிளாவுக்கு: நான் மேலே ஒரு நண்பருக்கு கூறியுள்ள பதில்தான் உங்களுக்கும் சொல்ல தோன்றுகிறது. தவறாக எண்ண வேண்டாம். உங்கள் அனைவரையும் விட நான் பிறந்த என் சொந்த ஊரின் காமிக்ஸ் மீது எனக்கு அக்கறை அதிகம் நண்பரே.

   Delete
  3. @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா:

   நிச்சயமாக ஆசிரியரை நோக்கி சொல்லப்பட்ட வார்த்தைகள் இல்லை அவை. மொழிபெயர்ப்பு வேறு ஒருவர் தான் செய்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா ? ஆனால் நிறைய பேர் ஆசிரியரை அவை தாக்குகிறது என்ற நினப்பதற்கு வாய்ப்புள்ளது.

   அவை உங்கள் மனதை காயப்படுத்தி இருப்பதால், சௌந்தர் ப்ளீஸ் அந்த கமேன்ட்டை அழித்து விடுங்கள்.

   நான் அதை மட்டும் நீக்கி விட்ட கமெண்ட்டை கீழே போட்டிருக்கிறேன்.

   ஆனால் சும்மா குடுத்ததை படிச்சுட்டு போங்க என்கிற வாதம் வளர்சிக்கல்ல என்பதை உணருங்கள்.

   Delete
  4. @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா:

   "100 % முழுமையான இதழை காட்டுங்கள்" என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அப்படியே தான் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்க வேண்டியதுதான்.

   Delete
  5. நன்றி நண்பர்களே !எனது கம்மண்டையும் தூக்கி விடுங்கள் ,அதில் அந்த வார்த்தை இருப்பதால் !கண்டிப்பாக நண்பரே ,நியாயமான தவறுகளை சுட்டி காட்டினால் நல்லதே !ராஜ் குமாரால் புத்தகம் படிக்கும் கலையை கற்று கொண்டேன் ,சௌந்தர் உங்களது ஆர்வம் தெரியுமே !கலக்குங்கள் யார் மனமும் புண் படாமல் ,ஆசிரியராய் இருப்பினும்,அங்கு பணி புரிந்த மொழி பெயர்ப்பாளர் ஆனாலும் ......மோசமாக இல்லையே !

   Delete
 10. nanbaa enakku mattum time kidichaa unga scangalai veche oru pathivai pottu vittu poiduven! advance nanri!

  ReplyDelete
  Replies
  1. //unga scangalai veche oru pathivai pottu vittu poiduven// Padungal nanbare ondrum prachchanai illai. (Thuppakkiyudan photo unduthaane :) )

   Delete
 11. நண்பரே!! தங்களின் தெளிவான பதிவுக்கு மிக்க நன்றி..... ஆனால் திரும்பிய பக்கமெல்லாம், ஒரே பதிவு ஒரே புகைப்படம், ஒரே செயதி "கேப்டன் டைகரின் தங்க கல்லறை" மொழிபெயர்ப்பு.... சரி இல்லை என்பதாகவே! உள்ளது. . மொழி பெயர்த்தவர் இனி ஒரு நாளும் 'லயன் காமிக்ஸ்' அலுவலகத்தை திரும்பி கூட பார்க்கமாட்டார்... அவ்வளவு விளம்பரரம் அவருக்கு கிடைத்து விட்டது?... ஆனால்... மிக நீண்ட கதையை மொழிபெயர்ப்பதும், பிறகு அதை கோர்வையாக்குவதும், கடினமான வேலை என்பதை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை ஏன்?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே

   //கடினமான வேலை என்பதை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை ஏன்?// நண்பரே பிரிண்டிங் வேலையில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி சிறுவயதில் அதில் வேலை பார்த்த விதத்தில் எனக்கு முழுதும் தெரியாவிட்டாலும், ஓரளவு தெரியும்.

   தவறாக எண்ண வேண்டாம். எனக்கு தெரியும் குறைகளை சுட்டிக்காட்டுவதும் என்னைப் பொறுத்தவரை முக்கியமே. அதனால்தான் எனக்கு தெரிந்த வகையில் கூறியுள்ளேன். நான் கூறியவை சரி எனப்பட்டால் ஆசிரியர் அவர்கள் அதைக் களைய முயற்சிப்பார் அல்லவா?

   Delete
 12. நண்பர் சௌந்தர் அவர்களுக்கு,

  காமிக்ஸ் படிப்பதில் மொழி ஒரு mediation. அவ்வளவே !! நாம் பணியினில் தெரியாமல் செய்யும் மற்றும் தெரிந்தே சில சமயம் செய்திடும் தவறுகளை விடவா இது மோசம்?

  Also, the following comment:

  "லயன் மற்றும் முத்து காமிக்ஸை மற்ற தமிழ் காமிக்ஸ்களில் இருந்து தனித்துக் காட்டுவது மொழிபெயர்ப்பின் தரமே. அதில் கவனமில்லாமல் இருத்தல் மிகவும் பெரிய பிரச்சனைகளில் கொண்டு போய் விட்டுவிடும். எழுச்சி பெற்ற வாசகர்களின் ஆர்வம் மிக விரைவில் காணாமல் போய்விடும்."

  தமிழ் காமிக்ஸ்கள் உலகத்தரம் கண்டிட நாற்பது வருடங்கள் காத்திருந்த நமக்கு அந்தத் தரத்தினில் இன்னும் மேம்பட்டிட இந்த கால அவகாசத்தினில் ஒரு பத்து விழுக்கடுகளுக்கும் குறைவாக காத்திருக்க முடியாதா?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே

   //நாம் பணியினில் தெரியாமல் செய்யும் மற்றும் தெரிந்தே சில சமயம் செய்திடும் தவறுகளை விடவா இது மோசம்? // பணிகளில் செய்திடும் தவறு நாம் தெரியாமல் செய்தாலும் நமக்கு கெட்ட பெயரையே ஏற்படுத்தும் அல்லவா ? அத்தோடு நான் எனக்கு தோன்றிய என் கருத்துக்களைத்தான் கூறியுள்ளேன். உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால் எனக்கு அதை விட வேறென்ன வேண்டும்.


   //தமிழ் காமிக்ஸ்கள் உலகத்தரம் கண்டிட நாற்பது வருடங்கள் காத்திருந்த நமக்கு அந்தத் தரத்தினில் இன்னும் மேம்பட்டிட இந்த கால அவகாசத்தினில் ஒரு பத்து விழுக்கடுகளுக்கும் குறைவாக காத்திருக்க முடியாதா?// காத்திருப்பதில் யாருக்கும் பிரச்சனை இல்லை நண்பரே. ஆனால் எனக்கு குறை என்று தோன்றும் விசயங்களை எடுத்துக் கூறவும் காத்திருக்க வேண்டுமா?

   Delete
 13. சௌந்தர் குமுறு குமுறு என்று குமுறீட்டீங்க போங்க. யப்பா கண்ண கட்டிருச்சு. அடிச்சு துவைத்து காயப் போட்டு விட்டீர்கள். :D

  டைகர் விசிறியாக நியாமாக கோபபட்டு இருக்கிறீர்கள்.

  நீங்கள் சொன்ன அனைத்து உதாரணங்களும் உண்மையே. நேரடியாக ஒரு விஷயத்தை சொல்லாமல் சுற்றி வளைத்து அல்லது ஜிகினா வார்த்தைகளை சேர்க்கிறேன் பார் என்று செய்ததின் விளைவு இது. நிறைய தேவை இல்லாத வார்த்தைகளும் உள்ளன பேமானி , கஸ்மாலம் (இப்போது இந்த வார்த்தைகள் சென்னையிலேயே அதிகம் உபயோகிக்க படுவதில்லை). இதெல்லாம் தேவையா ?

  ஹய் ஜாலி ஜாலி , என் செல்ல பாஸ் , ஒரு ஆட்டம் போட்டு விட்டு வருகிறேன் என்பதெல்லாம் நான் நேற்று (முதல் முறையாக தற்போதய பதிப்பை)படிக்கும் போதே நெருடிய வார்த்தைகள்.

  டெபுடி ஜிம்மியை மொழிபெயர்ப்பு ஒரு பித்துகுளியாக்கி விட்டது. :D

  //இந்த இதழ் நன்றாக ஜோடனை செய்யப்பட்ட முழு அழகுடன் கூடிய "உயிரில்லாத மணப்பெண்" என்றுதான் சொல்வேன்.
  //

  உங்கள் குமுறல் இந்த வரியில் முழு வீச்சில் வெளிப்பட்டிருக்கிறது.

  விமர்சனங்களை எடிட்டர் தீவிரமாக எடுத்து மொழி பெயர்ப்பு தரத்தை உயர்த்த வேண்டும்.

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. இதழை படித்த பின் இந்த பதிவை படிக்கிறேன். "ஹய் ஜாலி ஜாலி , என் செல்ல பாஸ்" - இவையெல்லாம் எனக்கும் படித்திடும் போது உறுத்திய வசனங்கள்.
  அதிலும் "வெட்டியான் வெட்டியாக வெட்ட வெளியிலே வெட்கமில்லாமல் இருக்காரே" (ஆச்சிரியக்குறி மிஸ்ஸிங்) படித்த போது கடுப்பாகி விட்டது (என்ன சொல்ல வராங்க என புரிந்து கொள்ள இந்த 'டயலாக்'கை வேறு இரண்டு முறை படிக்க வேண்டியது ஆயிற்று). நல்லவேளை இது போல் நிறைய இடங்களில் இல்லை.
  இந்த வசனங்கள் நம்மை நெளிய வைக்க பழைய இதழை படித்திட அவசியம் இல்லை என்பது என் கருத்து. மொத்தத்தில் இதுபோன்ற ஒரு சில இடங்களை மட்டும் நீக்கிவிட்டு பார்த்தால் இது ஒரு முழுமையான இதழே..

  ReplyDelete
 16. 100% Agree with you.this time translation is not good. given to much importance to matching/rhyming words (like T.Rajendar style silly dialogues) which is annoying to the serious story. it really reduces the intense nature of the story. hope translation gets better in the upcoming books.

  ReplyDelete

Blogger news